| 37 |
அந்த நுண்டொழி லாமெனக் கொள்பவர்
தந்த தொன்றினைத் தாமுநி றைகுறை
வந்த தென்றிலர் வாழ்த்திக்கொண் டையமாய்ச்
சிந்த வும்புயற் செங்கையிற் கொள்ளுவார். |
| |
அந்த
நுண் தொழில் ஆம் எனக் கொள்பவர்
தந்தது ஒன்றினை, தாமும், நிறை குறை
வந்தது என்று இலர், வாழ்த்திக் கொண்டு, ஐயமாய்ச்
சிந்தவும், புயற் செங் கையில் கொள்ளுவார். |
அந்த
நுட்பமான ஈகைத் தொழில் தமக்கும் தக்கதே ஆகுமென்று
கருதிக் கொள்பவராகிய சிலர் அதற்கு உதவுமாறு தந்ததொரு பொருளை,
இவ்விருவர் தாமும், வந்த பொருள் நிறைவானது குறைவானது என்று
வேற்றுமை கருதாமல், தந்தவரை வாழ்த்திய வண்ணமாய், அவற்றையும்
தானமாய் ஈயும் பொருட்டு, மேகம் போன்று கொடையிற் சிறந்த தம்
செந்நிறக் கைகளில் ஏற்றுக்கொள்வர்.
| 38
|
நாக்க ணங்குக
னிந்துந வின்றசொல்
நோக்க ணங்குகண் ணோட்டநொ துத்தகை
யூக்க ணங்கிடுந் தானமென் றுள்ளுவார்
கோக்க ணங்கொடு வோங்குகு லத்தினார். |
| |
நாக்கு அணங்கு
கனிந்து நவின்ற சொல்,
நோக்கு அணங்கு கண்ணோட்டம், நொதுத்த கை
ஊக்கு அணங்கு இடும் தானம் என்று உள்ளுவார்,
கோக் கணம் கொடு ஓங்கு குலத்தினார். |
தாவிதனில்
தொடங்கிய மன்னர் வரிசையைத் தன்னிடத்தே கொண்டு
உயர்ந்த குலத்தைச் சேர்ந்த இவ்விருவரும், கனிவோடு சொன்ன சொல்லே
நாவிற்கு அழகு தருவது எனவும், கருணையே கண்ணுக்கு அழகு தருவது
எனவும், இரவலர்க்கு இடும் தானமே உழைத்த கைக்கு மிக்க அழகு
தருவது எனவும் எண்ணுவர்.
'உள்ளுவார்'
என்றது, உள்ளி அவ்வாறே செய்வர் என்ற கருத்தை
உட்கொண்டது. நாக்கு - 'நாவிற்கு' என்ற சொல் 'இன்' சாரியை கெட்டு
நின்றது. கண்ணோட்டம் - கருணை; அது பிறர் துயரம் கண்டு பிறக்கும் |