பக்கம் எண் :

முதற் காண்டம்487

இரக்கமும். பிறர் குற்றத்தை மன்னிக்கும் இரக்கமுமாக இருவகைப்படும்.
'கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம். அஃதின்றேல் புண்ணென்று
உணரப்படும்'. என்ற குறள் (575) கருத்து இங்குக் கையாளப்பட்டுள்ளது.
ஊக்கு - 'ஊங்கு' என்ற சொல் எதுகைப் பொருட்டு வலித்தல் விகாரம்
கொண்டது.

 
                   39
மங்குன் முற்றிய மாடமெ வன்செயுங்
கங்குன் முற்றிய கையரைக் கொண்டதேல்
சங்குண் முத்தெனப் புன்மனை தாமுறைந்
தெங்கு முற்றிய மாண்பிவ ரேந்தினார்.
 
மங்குல் முட்டிய மாடம், எவன் செயும்,
கங்குல் முற்றிய கையரைக் கொண்டதேல்?
சங்கு உள் முத்து என, புன் மனை தாம் உறைந்து,
எங்கும் முற்றிய மாண்பு, இவர், ஏந்தினார்.

     மேகத்தை முட்டிய தன்மையாய் உயர்ந்த மாளிகையும், இருள்
முதிர்ந்த பாவிகளைத் தனக்குள்ளே கொண்டிருக்குமாயின், என்ன பயனைச்
செய்யும்? இவ்விருவரோ, ஒரு சிறு மனையுள் தாம் வாழ்ந்திருப்பினும்,
சங்கின் உள்ளிருந்தே ஒளிரும் முத்துப் போல், எங்கும் சென்று நிறைந்த
மாண்பைத் தாங்கி நின்றார்.

 
                  40
அங்க மட்கலந் தீட்டுவ ராரெனாப்
பொங்க கத்தைக்க வர்வலை போன்றுபூண்
செங்க லத்தினந் தீதென நீத்தருட்
டங்க முற்றெளி வேடந்த ரித்துளார்.
 
அங்க மண் கலம் தீட்டுவர் ஆர் எனா,
பொங்கு அகத்தைக் கவர் வலை போன்று, பூண்
செங் கலத்து இனம், தீது என நீத்து, அருள்
தங்க முற்று எளி வேடம் தரிந்து உளார்.

     உடலாகிய மண் பாண்டத்தைக் கோலம் தீட்டுவாரும் உண்டோவென்று
மதித்து, ஆசையால் பொங்கும் பிறர் மனத்தைத் தம்பால் கவர்ந்து இழுக்கும்
வலை போன்ற உடலில் அணியும் செம்பொன்னாலாகிய அணி வகைகள்