பலவகை
நலங்கள்
- விளம், கூவிளம், கூவிளம், கூவிளம், கூவிளம், கூவிளங்காய்.
64
|
தேயமு
ழங்கின வாலைகள் பண்டித டேயமு ழங்கினபா
வாயமு ழங்கின வார்புகழ் சங்குக ளாயமு ழங்கினமேற்
பாயமு ழங்கின மேடக மின்புனல் பாயமு ழங்கினநீர்
தோயமு ழங்கின மேதிக டெண்டிரை தோயமு ழங்கிழையார். |
|
தேய
முழங்கின ஆலைகள், பண்டிகள் தேய முழங்கின. பா
ஆய முழங்கின ஆர் புகழ். சங்குகள் ஆய முழங்கின. மேல்
பாய முழங்கின மேடகம். இன்புனல் பாய முழங்கின. நீர்
தோய முழங்கின மேதிகள். தெண்திரை தோய முழங்கு இழையார். |
சூதேய நாட்டில்,
ஆலைகள் தேய்வதனால் முழங்கின. வண்டிகள்
தரையில் தேய்வதனால் முழங்கின. பாக்களை ஆய்வதனால் நிறை புகழ்
முழங்கின. சங்குகள் நிகழ்ச்சிக்கு ஏற்ப ஆராய்ந்து ஊதப் படுதலினால்
முழங்கின. ஒன்றன்மேல் ஒன்று பாய்ந்து மோதுதலால் ஆட்டுக் கிடாய்கள்
முழங்கின. குளம் வயல்களிற் பாய்வதனால் இனிய நீர் முழங்கின.
எருமைகள் நீரில் விழுந்து தோய்வதனால் முழங்கின. அணிகலன்
அணிந்த மகளிர் நீராடத் தெளிந்த நீரில் தோய்வதனால் முழங்கினர்.
'முழங்கு இழையார்' என்பதனை 'இழையார் முழங்கினர்' என விரித்துப்
பொருள் காண்க.
65
|
கான்றிரள்
சிந்திய சோலையி பஞ்செறி கான்மலர் சிந்தியதீந்
தேன்றிரள் சிந்திய பூதர ளஞ்செறி தீம்புனல் சிந்தியவான்
மீன்றிரள் சிந்திய மானவ ளஞ்செறி வேய்மணி சிந்தியபா
லான்றிரள் சிந்திய சீரெவை யுஞ்செறி யார் பொழில் சிந்தியதே. |
|
கான்
திரள் சிந்திய சோலை. இபம் செறி கான் மலர் சிந்திய.
தீம் தேன் திரள் சிந்திய பூ. தரளம் செறி தீம் புனல் சிந்திய.
வான் மீன் திரள் சிந்திய மான வளம் செறி வேய் மணி சிந்திய.
பால் ஆன் திரள் சிந்திய, சீர் எவையும் செறி ஆர் பொழில்
சிந்தியதே. |
|