பக்கம் எண் :

முதற் காண்டம்50

     சோலைகள் வாசனையை அங்குத் திரளாகச் சிந்தின. மரக்கிளைகள்
தம்மிடத்துச் செறிந்துள்ள வாச மலர்களைச் சிந்தின. பூக்கள் இனிய
தேனைத் திரளாகச் சிந்தின. எங்கும் செறிந்து கிடந்த குளம் பொய்கை
போன்ற இனிய நீர் நிலைகள் தம்மிடமுள்ள சங்குகள் ஈன்ற முத்துக்களைச்
சிந்தின. விண்மீன்களின் திரள் சிந்திக் கிடப்பதுபோல வளம் செறிந்த
மூங்கில்கள் தம்மிடமுள்ள மணியாகிய முத்துக்களைச் சிந்தின. பசுக்
கூட்டங்கள் பாலைச் சிந்தின. எல்லாம் தன்னிடம் செறிந்து நிறைந்துள்ள
அந்நாடு செல்வங்கள் எல்லாவற்றையும் சிந்தித் தந்தது.
 
                       66
ஆலையின் வாயுள தேனக லுந்தரு வான்மலர் வாயுளதேன்
சோலையின் வாயுள தேனொடு தூறிய தூய்கனி வாயுளதேன்
மாலையின் வாயுள தேனளி வந்தவி றாலதின் வாயுளதேன்
வேலியின் வாயுள தேரிய செந்நெல்வி ளைக்குவ பாயினவே.
 
ஆலையின் வாய் உள தேன், அகலும் தரு ஆர் மலர் வாய்                                           உளதேன்,
சோலையின் வாய் உள தேனொடு, தூறிய துய் கனி வாய் உள                                           தேன்,
மாலையின் வாய் உள தேன், அளி வந்த இறால் அதின் வாய்                                           உளதேன்,
வேலியின் வாய் உள தேரிய செந்நெல் விளைக்குவ பாயினவே.

     ஆலையிலுள்ள கருப்பஞ் சாறாகிய தேனும், அகன்று படர்ந்த
மரங்களில் நிறைந்துள்ள மலர்களில் உள்ள தேனும், சோலைகளிலுள்ள
தேனொடு, சிதறிக் கிடந்த தூய பழங்களிலுள்ள தேனும், மாலைகளிலுள்ள
தேனும், வண்டுகள் சேர்த்துத் தர வந்த தேனடையிலுள்ள தேனும் ஒன்றாகக் கலந்து, வயலிலுள்ள சிறந்த நெந்நெல்லை விளைவிக்கும் அளவிற்குப்
பாய்ந்தோடின.
 
                     67
பாழை கேநனி காட்டிய பங்கய நானமு யங்கழகே
மீனழ கேநனி காட்டிய விண்டவிர் வீயின மண்டழகே
தேனழ கேநனி காட்டிய தெண்டுளி மாரிசெ றிந்தழகே
வாழை கேநனி காட்டுப ளிங்கென வாவிய ழங்கழகே.