பானு அழகே நனி
காட்டிய பங்கய நானம் முயங்கு
அழகே, மீன் அழகே நனி காட்டிய விண்டு அவிர் வீ இனம்
மண்டு அழகே,
தேன் அழகே நனி காட்டிய தெண் துளி மாரி செறிந்த அழகே,
வான் அழகே நனி காட்டு பளங்கு என வாவி வழங்கு அழகே.
|
வாசனை
பொருந்திய தாமரை மலர்களின் அழகு கதிரவனின் அழகை
நன்றாகக் காட்டின. மலர்ந்து ஒளிரும் மலர்க்கூட்டங்களில் செறிந்து கிடந்த
அழகு விண்மீன்களின் அழகை நன்றாகக் காட்டின. மழையிடம் செறிந்து
கிடந்த தெளிந்த நீர்த்துளிகளின் அழகு தேனின் அழகை நன்றாகக்
காட்டின. நன்றாகப் பளிங்கு போல் காட்டும் குளங்கள் வழங்கிய அழகு,
வானுலகத்தின் அழகாக அமைந்தது.
'அமைந்தது'
என்று ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது.
'மலர்களின் அழகு' என்பது போன்று வரும் தொடர்களில் 'அழகு' என்ற
சொல்லைப் பல வகை அழகுகளைச் சுட்டும் பன்மைச் சொல்லாகக் கொள்க.
செறிந்த + அழகே - 'செறிந்த வழகே' என வர வேண்டியது, தொகுத்தல்
விகாரமாய்ச் 'செறிந்தழகே' என நின்றது.
68
|
காரொடு
நேர்பொரு தும்பொறை யேபொழி காரொடு கைபொருதுங்
தாரொடு நேர்பொரு துங்கல னேதட மாரொடு தார்பொருதும்
பாரொடு நேர் பொரு துஞ்சக டேநளிர் பாலொடு பாபொருதுஞ்
சீரொடு நேர்பொரு தும்பொழி லேசெழு வீடொடு சீர்பொருதும். |
|
காரொடு
நேர் பொருதும் பொறையே; பொழி காரொடு கைபொருதும்.
தாரொடு நேர் பொருதும் கலனே; தடமாரொடு தார் பொருதும்
பாரொடு நேர் பொருதும் சகடே. நளிர் பாலொடு பா பொருதும்.
சீரொடு நேர் பொருதும் பொழிலே; செழு வீடொடு சீர் பொருதும் |
|