பண்ட
- 'பண்டை' என்ற சொல் எதுகை இன்னோசைப் பொருட்டு
இவ்வாறு நின்றது. தானியல் + கண்ட: 'தானியலைக் கண்ட' என்ற
பொருளில் 'தானியற் கண்ட' எனப் புணர்ந்து நின்றது.
| 49 |
பின்னை யொன்றில பிற்பகல் பேரெழி
லன்னை யின்றிரு வானனம் வாடல்காண்
டன்னை யுன்னில மாதவ னொந்துமீன்
மின்னை வென்றகண் விண்டுறை வென்றதே. |
| |
பின்னே,
ஒன்று இல பிற் பகல், பேர் எழில்
அன்னையின்
திரு ஆனனம் வாடல் காண்
தன்னை உன்னு இல மாதவன் நொந்து, மீன்
மின்னை வென்ற கண் விண்டு உறை வென்றதே. |
பின்
ஒரு நாள், உண்பதற்கு ஒன்றும் இல்லாத பிற்பகல் வேளையில்,
பேரழகுள்ள அன்னையின் திருமுகம் வாடுதலைக் கண்ட, தன்னைப் பற்றி
எண்ணுதல் இல்லாத பெருந் தவத்தோன் நொந்தான், விண்மீனின் ஒளியை
வென்ற அவன் கண் நீரைச் சொரியவிட்டு மழைத் துளியை வென்றது.
'பிற்பகல்'
என்ற குறிப்பால் முற்பகலும் உணவின்மை பெறப்படும்.
'அன்னை' என்றது, கருவுற்ற நிலையில் உணவில்லாக் கொடுமை
கருதியது.
| 50 |
மன்ன நம்மணம் வாய்ந்துமு டிப்பமுற்
பொன்ன நின்கொடி பூத்தது தந்தபின்
னுன்ன ருஞ்சுவை யொன்றில தீதலு
மன்ன வண்டயை யோற்கரி தோவென்றாள். |
| |
"மன்ன
நம் மணம் வாய்ந்து முடிப்ப முன்
பொன்ன
நின் கொடி பூத்தது. தந்த பின்,
உன்ன அருஞ் சுவை ஒன்று இலது ஈதலும்
அன்ன வண் தயையோற்கு அரிதோ?" என்றாள். |
|