மரியாள்
சூசையை நோக்கி, "நம் திருமணம் நிலையாக வாய்ந்து
முடியும் பொருட்டு, முன் பொன் போன்ற உன் கொடியாகிய கோல்
பூத்தது. அதனை முடித்துத் தந்தபின், நிலைத்தற்கரிய சுவையுள்ள
உணவை ஒன்றும் இல்லாமலே படைத்துத் தருதலும் அத்தகைய தாராள
தயவுமுள்ள ஆண்டவனுக்கு அரிதென்று கருதலாமோ?" என்றாள்.
சுவை
- சுவையுள்ள உணவுக்கு ஆகுபெயர். 'மன்ன' என்பதனை
விளியாகக் கொள்ளினும் அமையும்.
| 51 |
என்ன லோடொரு காரண மின்றியுங்
கன்ன லோமது வோகனித் தன்மையோ
மின்ன லோடிய பொற்கல மீதொரு
பன்ன லோடடை யாப்பயன் கண்டுளார். |
| |
என்னலோடு,
ஒரு காரணம் இன்றியும்,
கன்னலோ
மதுவோ கனித் தன்மையோ,
மின்னல்
ஓடிய பொன் கலம் மீது, ஒரு
பன்னலோடு
அடையாப் பயன் கண்டு உளார். |
என்று
அவள் சொல்லியதுமே, ஒரு துணைக் காரணமும் இல்லாமலே,
ஒளி பரந்த ஒரு பொற் பாத்திரத்தின் மீது, கரும்போ தேனோ முக்கனியின்
தன்மையோ என்ற சுவை கொண்டதாய், சொல்லுதற்கு அமையாத ஓர்
உணவுப் பயனைக் கண்டு உண்ட நிறைவு கொண்டனர்.
அற்புத
உணவாதலின், கண்ணாற் கண்டதுமே வாயால் உண்ட
பயனெல்லாம் கொண்டனரென்பது கருத்து.
| 52 |
இற்றை யோர்ந்தவில் லோருவந் தோங்கவே
மற்றை யோர்பகல் மாந்திட வொன்றிலர்
கற்றை யோர்பிழம் புற்றுருக் காட்டிவா
னுற்றை யோருண வுய்த்துவ ழங்கினார். |
| |
இற்றை ஓர்ந்த
இல்லோர், உவந்து ஓங்கவே,
மற்றை
ஓர் பகல் மாந்திட ஒன்று இலர்,
கற்றை
ஓர் பிழம்பு உற்ற உருக் காட்டி, வான்
உற்றை
யோர், உணவு உய்த்து வழங்கினார். |
|