இதனை
மனத்தால் முன் உணர்ந்த அவ்வறியவர் இருவரும்,
மற்றொரு நாள் உண்ண ஒன்றுமில்லாது இருக்கையில், உடலால் உணர்ந்தும்
மகிழ்ந்து எழுச்சி கொள்ளுமாறு, கதிர்க் கற்றை ஒருங்கு திரண்டது போன்ற
உருவத்தோடு வானுலகத்தவர் வந்து தோன்றி, உணவைத் தாமே கொண்டு
வந்து கொடுத்தனர்.
உற்ற
+ திரு - 'உற்றவுரு' என வர வேண்டியது, 'உற்றுரு' எனத்
தொகுத்தல் விகாரம் கொண்டது. உற்றையோர் - 'உற்றோர்' என்பதன்
விரித்தல் விகாரம்.
| 53 |
எண்ணந் தீர்ந்தவெ ழிற்கொடு வெண்ணிலா
வண்ணந் தீர்ந்தொளிர் மாறுகத் தும்பர் சூழ்
தண்ணந் தீம்புன லாடலர்த் தண்டொடை
சுண்ணந் தோயத்துரந் தூங்குபு தோன்றினார். |
| |
எண்ணம்
தீர்ந்த எழில் கொடு, வெண் நிலா
வண்ணம்
தீர்ந்து ஒளிர் மாறுகத்து உம்பர், சூழ்,
தண்
அம் தீம் புனல் ஆடு அலர்த் தண் தொடை
சுண்ணம்
தோய்ந்த உரம் தூங்குபு, தோன்றினார். |
வெண்ணிற
நிலாவின் நிறம் நிரம்பி ஒளிரும் ஆடை அணிந்த
வானவர், எண்ணத்திற்கும் எட்டாத உருவ அழகு கொண்டும், குளிர்ந்த
அழகிய இனிய நீரில் அசைந்தாடும் தாமரை போன்ற மலர்களால்
தொடுத்த மாலைகளை நறுமணப் பொடி தோய்ந்த தம் மார்புகளில்
தொங்குமாறு அணிந்து கொண்டும் அவ்விருவரைச் சூழ வந்து தோன்றினர்.
வண்ணம் தீர்தலாவது,
அந்நிறத்துக்குரிய முழு அழகு கொண்டிருத்தல்.
முதலடி இறுதியை 'எண் இலா' எனப் பிரித்து, வண்ணத்திற்கு அடை
மொழியாக்கலும், உம்பர்க்கு அடைமொழியாக்கலும் ஒன்று.
| 54 |
துகிலிற் றோயுரந் தோயணி தோன்றவே
யகிலிற் றோய்துகில் வாடையோ டாடவிண்
முகிலிற் றோய்வரை மொய்புய மோங்கநான்
புகலிற் றோய்நயத் தோர்யொரு வொத்ததோ. |
|