பக்கம் எண் :

முதற் காண்டம்496

     கிலில் தோய் உரம் தோய் அணி தோன்றவே, அகிலில் தோய் துகில்
வாடை யோடு ஆட, விண் முகிலில் தோய் வரை மொய் புயம் ஓங்க, நான்
புகலின், தோய் நயத்து ஓர் பொருவு ஒத்ததோ? அவ்வானவர் அணிந்திருந்த
ஆடையோடு தோய்ந்து கிடந்த மார்பில் பொருந்திய அணிகலன்கள்,
வெளியே தோன்றின. அகிற்புகையில் தோய்ந்த அந்த ஆடை வாடைக்
காற்றில் அசைந்தாடித் தன் மணம் பரப்பியது. மேகத்தோடு தோய்ந்த மலை
போன்ற வலிய புயங்கள் ஆடையின் ஊடே எழுச்சி பெற்றுத் தோன்றின.
இவற்றை யெல்லாம் நான் எடுத்துக் கூற முற்பட்டால், அவ்வாடையில்
தோய்ந்த அழகுக்கு ஓர் ஒப்புமை சொல்லியதாகவும் அமையுமோ?

 
                55
புரிந்த தாமரை பொற்றவி சிட்டுமின்
னெரிந்த மீனொடு தேனிழி பூந்துகள்
விரிந்த வானிவி ரித்துயர் வாசனை
சொரிந்த நீர்ப்புனல் தூற்றி வழங்கினார்.
 
புரிந்த தாமரை பொன் தவிசு இட்டு, மின்
எரிந்த மீனொடு தேன் இழி பூந்துகள்
விரிந்த வானி விரித்து, உயர் வாசனை
சொரிந்த நீர்ப் புனல் தூற்றி வழங்கினார்.

     பொன்னாலாகிய ஆசனங்களின் மீது விரும்பத் தக்க தாமரை
இதழ்களைப் பரப்பி, ஒளியுடன் விளங்கிய விண்மீன்களோடு தேனைச்
சொரியும் பூக்கள் பரந்த மேற்கட்டியை மேலே விரித்து, அவ்விருவர்மீதும்
உயர்ந்த மணம் சொரிந்த பன்னீர் தெளித்து உணவு வழங்கத் தொடங்கினர்.
மேற்கட்டியின் கீழ் இட்டு வைத்த ஆசனங்களில் வானவர் அவ்விருவரையும்
அமர்வித்துப் பன்னீர் தெளித்து, அதன் பின்னர் உணவு பரிமாறத்
தொடங்கினர் என்று கொள்க, பூந்துகள் - மகரந்தம் கொண்ட மலரைக்குறித்தது.