| 56 |
கான்சொ
ரிந்தக னிப்படப் பாலொடு
தேன்சொ ரிந்தசு வைப்படச் சேணுளோர்
வான்சொ ரிந்தம துக்கொடு பல்லுணா
மீன்சொ ரிந்தவெ யிற்கலத் தீட்டினார். |
| |
கான் சொரிந்த
கனிப் பட, பாலொடு
தேன் சொரிந்த சுவைப் பட, சேண்உளோர்,
வான் சொரிந்த மதுக் கொடு, பல் உணா
மீன் சொரிந்த வெயில் கலத்து ஈட்டினார். |
வானுலகில் வாழ்வோராகிய
அவ்வானவர், மணம் பொழிந்த
கனிகளின் சுவை அமையவும், பாலோடு தேனைச் சேர்த்துச் சொரிந்த
சுவை அமையவும், வானுலகினின்று கொணர்ந்து சொரிந்த மதுவையும்
சேர்த்து, விண்மீன் சொரிந்த ஒளியைக் கொண்ட பொற்கலங்களில்
பல்வேறு உணவு வகைகளைப் பரப்பி வைத்தனர்.
| 57 |
கண்கொ டுண்டக ளிப்பினு மேழிசைப்
பண்கொ டுண்டசெ விப்பயன் பாடெனா
வெண்கொ டுண்டள வெல்லையில் தேவபல்
லுண்கொ டுண்டந யத்திணை யுள்ளதோ. |
| |
கண் கொடு
உண்ட களிப்பினும் ஏழு இசைப்
பண்
கொடு உண்ட செவிப் பயன் பாடு எனா
எண்
கொடு உண்டு, அளவு எல்லை இல் தேவ பல்
உண்
கொடு உண்ட நயத்து இணை உள்ளதோ? |
கண்ணால்
நுகர்ந்த தெய்வக் காட்சிகளின் களிப்பைக் காட்டிலும் ஏழு
இசையால் அமைந்த பாடல்களை நுகர்ந்த செவி பெற்ற பயன் சிறப்பானது
என்ற எண்ணங் கொண்டு அவற்றை நுகர்ந்ததோடு, அளவும் முடிவும்
இல்லாத பல வகைப்பட்ட தெய்வ உணவுகளையும் உடன் கொண்டு
அவ்விருவரும் உண்டு கண்ட இன்பத்திற்கு இணையும் உண்டோ? |