| 59 |
அள்ளுந்
தன்மைத் தார்ந்தொளி வானோ ரரிதென்பாக்
கொள்ளுந் தன்மைத் தின்னிசை பாடக் குளிர்தன்கோல்
விள்ளுந் தன்மைத் தூறிய தேன்போல் வினையெல்லா
முள்ளுந் தன்மைத் தொண்கொடி கொண்டா
னுரைகொண்டான். |
| |
அள்ளும் தன்மைத்து
ஆர்ந்த ஒளி வானோர், அரிது என் பா
கொள்ளும் தன்மைத்து இன் இசை பாட, குளிர் தன் கோல்
விள்ளும் தன்மைத்து ஊறிய தேன் போல், வினை எல்லாம்
உள்ளும் தன்மைத்து, ஒண் கொடி கொண்டான், உரை
கொண்டான். |
அள்ளிக்
கொள்ளலாம் போன்று நிறைந்த ஒளி கொண்ட வானவர்,
எனது பாடல் கொள்ளும் தன்மைக்கு அரிதாக இனிய பாடல்களைப்
பாடிக்கொண்டிருக்க, ஒளி பொருந்திய மலர்க் கொடியை உடையவனாகிய
சூசை, அங்கு நிகழ்ந்தவற்றை யெல்லாம் நினைக்கும் தன்மையால், குளிர்ச்சி
பொருந்திய தன் கோல் மலர்ந்தவிடத்து ஊறித் துளித்த தேன்போல்,
இவற்றைச் சொல்லலுற்றான்:
ஆர்ந்த + ஒளி
- 'ஆர்ந்தவொளி' என வரவேண்டியது, தொகுத்தல்
விகாரமாய் 'ஆர்ந்தொளி' என நின்றது.
| 60 |
பின்றா வல்லோய் பேணிய வன்போய் பிரிவின்றி
யொன்றாய் நின்றோ யீங்குயி ரெல்லா முணவீந்தோய்
குன்றா வன்பா னம்பின யார்யார் குறையுண்டோ
மென்றா ருண்டோ வென்னுயிர் மாறா தினிதாள்வோய். |
| |
"பின்றா
வல்லோய், பேணிய அன்போய், பிரிவு இன்றி
ஒன்றாய்
நின்றோய், ஈங்கு உயிர் எல்லாம் உணவு ஈந்தோய்,
குன்றா அன்பால் நம்பின யார் யார், 'குறை உண்டோம்'
என்றார் உண்டோ? என் உயிர் மாறாது இனிது ஆள்வோய்! |
"எனது உயிரை
என்றும் மாறுபாடு இல்லாமல் இனிதே ஆண்டு
நடத்தும் ஆண்டவனே, எதற்கும் பின்னிடாத வல்லமை உடையவனே,
யாவரையும் பேணும் அன்பு கொண்டவனே, பிரித்துப் பேச இடமின்றி
ஒரே
|