பக்கம் எண் :

முதற் காண்டம்500

பொருளாய் நின்றவனே, இவ் வுலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் உணவு
ஈந்தவனே, குறையாத அன்போடு உன்னை நம்பின யார் எவருள்ளும்,
'நாங்கள் குறைவாகவே உண்டோம்' என்று சொல்லியவர் உண்டோ?

     'குறை உண்டோம்' என்பதனைப் பொதுவாகவே கொண்டு,
'குறைகன் அடைந்தோம்' எனப் பொருள் கொள்ளுதலும் ஒன்று.

 
                      61
வல்லா ருண்டோ வுன்னைய லாதுன் வலநம்பி
யில்லா ருண்டோ வுண்டில ருண்டோ விவையிங்கண்
கல்லா ருண்டோ கண்டவை யெண்ணிக் கரவாதேற்
சொல்லா ருண்டோ வுன்னருள் வாழ்த்துந் தொடைமிக் கோய்.
 
"வல்லார் உண்டோ உன்னை அலாது? உன் வலம் நம்பி
இல்லார் உண்டோ? உண்டிலர் உண்டோ? இவை இங்கண்
கல்லார் உண்டோ? கண்டவை எண்ணிக் கரவாரேல்,
சொல்லார் உண்டோ? உன் அருள் வாழ்த்தும் தொடை மிக்கோய்!

      "உன் அருளை அடைந்தவர் வாழ்த்திப் பாடும் பாக்களை
மிகுதியாகக் கொண்டுள்ளவனே, உன்னை அல்லாமல் வல்லவரென்று
வேறு எவரும் உண்டோ? உன் வல்லமையை நம்பி வறுமை உற்றோர்
உண்டோ? உண்ணாதிருந்தவர் உண்டோ? இவற்றை அறியாதவர்
இவ்வுலகில் உண்டோ? இவற்றையெல்லாம் கண்டவர், தாம்
கண்டவற்றை எண்ணி மறைக்காமல் போற்றும் இயல்பு உடையவராய்
இருப்பின், அவற்றை எடுத்துச் சொல்லாதிருப்பவரும் உண்டோ?

     'கல்லார்' என்பது 'அறியாதவர்' என்ற பொருளில் நின்றது.
ஆண்டவனை வாழ்த்திப் பாடியுள்ள மிகுதியான பாக்கள் அவனது
அருட் கொடைகளுக்குச் சான்று பகருமென்பது கருத்து. இனி, தன்னை
வாழ்த்திப் பாடும் பாக்களைக் காட்டிலும் ஆண்டவன் அருள் மிகக்
கொண்டவன் என்ற பொருளும் பொருந்தும்.