| பணிகாரச் சுவையுடையதாய்
இருக்க, யாதென அறியாது 'இது என்ன?'
என்று ஒருவரையொருவர் கேட்ட வினாவே தனக்குப் பெயராய்
நிலைக்கப்பெற்றது. கங்காரு என்ற ஆஸ்திரேலிய விலங்கின் பெயரும்
இவ்வாறு அமைந்ததெனக் கூறுவர். உணலில்லாமல் இசுரவேலர்
பாலைவனத்தில் தவித்தபோது, கடவுள் மோயீசனுக்குக் கூறியபடி,
வானினின்று பொழிந்த இவ்வற்புத உணவை இசுரவேலர் நாற்பதாண்டுகள்
உண்டு வாழ்ந்தனர் (ப. ஏ., யாத்திராகமம், 16:1-36). இது இயேசுநாதர்
அப்ப வடிவாய்த் தம் உடலையே தம் அடியாருக்கு உண்ணக் கொடுப்பதன்
அடையாளமாகவும் அமைந்துள்ளது. 'ஈந்தவோர்' என்பது 'ஈந்தோர்' எனத்
தொகுத்தல் விகாரமாயிற்று.
| 65 |
மாண்டோர்
முனியே கான்வழின் யுண்ணா மயலுற்றா
னான்டோ ரமரன் றந்தவோர் பிண்ட மயிற்கின்றா
வீண்டோர் வழியே நாற்பது நாள்போய் நிகரற்றான்
மீண்டோர் பசிதோன் றாதுயர் குன்றின் மிசைசென்றான். |
| |
"மாண்ட ஓர்
முனியே கான் வழி உண்ணா மயல் உற்றான்,
ஆண்டு ஓர் அமரன் தந்த ஓர் பிண்டம் அயில்கின்றான்,
நீண்ட ஓர் வழியே நாற்பது நாள் போய், நிகர் அற்றான்,
மீண்டு ஓர் பசி தோன்றாது, உயர் குன்றின்மிசை சென்றான். |
"மாண்புள்ள எலீயனென்னும்
ஒரு முனிவன் காட்டு வழியில் உணவு
உண்ணாமையால் மயக்கம் அடைந்தான். அங்கு ஒரு வானவன் கொணர்ந்து
தந்த உணவுப் பிண்டமாகிய அடையை உண்கின்றான். அதன் பின்
நீண்டதொரு வழியில் நாற்பது நாள் நடந்து போய், திரும்பப் பசியொன்றும்
தோன்றாமல், நிகரற்றவனாய், உயர்ந்த ஒரேபு மலைமீது ஏறிச் சென்றான்.
அமரன்
தந்த பிண்டம்: போட்டியில் தோற்ற கள்ளத்
தீர்க்கதரிசிகளைக் கொன்றதனால் எலியாஸ் இறைவாக்கினரைக்
கொல்ல அகாபு மன்னனின் மனைவி எசபேல் திட்டமிட்டாள். தப்பிச்
சென்ற வழியில் பசியால் மயங்கிக்கிடந்த எலியாசுக்கு ஒரு வானவன்
சூடாக்கிய பாறையில் சுட்டெடுத்த அடை ஒன்றைத் தந்தான். அதன்
பின் எலியாஸ் ஒன்றும் உண்ணத் தேவையின்றி நாற்பது நாள் நடந்து
ஒரேபு மலை உச்சியை |