|
அடைந்தார் (ப. ஏ.,
I அரசராகமம், 19:1-8). மாண்ட - பெயரெச்சம்: மாண்பு
குறிக்கும் 'மாண்' என்பது பகுதி. "மாண்ட என் மனைவியொடு மக்களும்
நிரம்பினர்" என்ற பிசிராந்தையார் கூற்றும் காண்க (புறம். 191). 'மாண்டவோர்,
நீண்டவோர்' என்பன, 'மாண்டோர், நீண்டோர்' எனத் தொகுத்தல்
விகாரமாயின. அயிற்கின்றான் - 'அயில்கின்றான்' என இயல்பாய் வரற்பாலது,
விகாரமாய்ப் புணர்ந்தது முனிவர் கொண்ட தனிவழி எனக் கொள்க.
| 66 |
கறித்துண்
பைம்புல் லொன்றில காய்தல் கருதிக்கார்
மறித்துண் ணாதெண் ணாவுயிர் மாழ்ந்தே மருளெல்லாஞ்
செறித்துண் ணன்றார் யோகிய வற்கே திளைபன்னாள்
பறித்துண் காகந் தானுண வீகப் பரிவீந்தாய். |
| |
"கறித்து உண்
பைம் புல் ஒன்று இல காய்தல் கருதி, கார்
மறித்து, உண்ணாது எண்ணா உயிர் மாழ்ந்தே, மருள் எல்லாம்
செறித்து உண் அன்று, ஆர் யோகி அவற்கே, திளை, பல்
நாள்,
பறித்து உண் காகம் தான், உணவு ஈகப் பரிவு ஈந்தாய். |
"மென்று உண்ணும்
பசும்புல் ஒன்றுமே வளர்தல் இல்லாமல் நாடு
காய வேண்டுமென்று நீ கருதி, மழையை விலக்கி, அதனால் எண்ணில்லா
உயிர்கள் உண்ணாமல் மயங்கி, மயக்கமே எல்லாவற்றையும் ஒரு சேர
உண்டு கொண்டிருந்த அந்நாளில், அரிய முனிவனாகிய அவ்வெலீயனுக்கு
மட்டுமே, யாரிடமும் பறித்து உண்ணும் இயல்புள்ள காகம் பல நாட்களாய்
மிகுந்த உணவைக் கொணர்ந்து கொடுக்குமாறு, நீயே பரிவோடு கொடுத்து
அனுப்பினாய்.
காகம் உணவு ஈந்தது:
பாடல் 45 அடிக் குறிப்பு நோக்குக: 'மருள்
எல்லாம் செறித்து உள் நன்று ஆர் யோகி' எனப் பிரித்துக் காணும்
உரை பொருந்து மேற்கொள்க. 'திளை' என்பதனைப் பிரித்து உணவோடு
கூட்டுக. 'பறித்துண் காகம் உணவு ஈதல்' என்ற முரணிற் காணும் இன்பம்
நோக்குக.
|