| 67 |
| நின்னா
லாமோர் நன்றது வெள்ள நெடிதெண்ண லென்னா லாமோ வென்னுயிர் வேந்தா வியல்தங்கை
தன்னா லாமோர் புன்றொழில் சார்பென் றவர்வாழா துன்னா லாமோர் நற்றுணை யோர்ந்தா
ருயிர்வாழ்வார். |
| |
"நின்னால் ஆம்
ஓர் நன்றது வெள்ளம் நெடிது எண்ணல்
என்னால் ஆமோ? என் உயிர் வேந்தா! இயல் தம் கை
தன்னால் ஆம் ஓர் புன் தொழில் சார்பு என்றவர் வாழாது,
உன்னால் ஆம் ஓர் நல் துணை ஓர்ந்தார் உயிர் வாழ்வார். |
"என் உயிருக்கு
அரசனாகிய ஆண்டவனே, உன்னால் ஆவதொரு
நன்மையின் வெள்ளத்தை விரிவாக ஆராய்தல் என்னால் இயலுவதோ?
தம் கையால் இயலக்கூடிய அற்பத் தொழிலே தம் வாழ்க்கைக்குப்
பற்றுக்கோடு என்று கருதி உன் துணையை மறந்தோர் வாழ்வு பெறார்.
உன்னால் ஆகும் ஒப்பற்ற நல்ல துணையை நினைந்தவரே உயிர்
வாழ்வார்.
வெள்ளம் போல்
ஆழ்ந்து அகன்று உயர்ந்த நன்மையை நன்மையின்
வெள்ளம் என்றான்.
| 68 |
குற்றந்
தேடேன் கோல்குடை யென்னுங் குறைதேடேன்
சுற்றந் தேடேன் சூழ்ந்தென வுள்ளஞ் சுடுவம்பொன்
பெற்றந் தேடே னம்பிய விம்மை பெரிதுய்க்கு
மற்றந் தேடேன் றேடுவ னீசெய் யருளென்றான். |
| |
"குற்றம் தேடேன்;
கோல் குடை என்னும் குறை தேடேன்;
சுற்றம் தேடேன்; சூழ்ந்து என உள்ளம் சுடு அம்பொன்
பெற்றம் தேடேன்; நம்பிய இம்மை பெரிது உய்க்கும்
அற்றம் தேடேன்; தேடுவன் நீ செய் அருள்" என்றான். |
"குற்றத்தால்
வரும் நலத்தை நான் தேடேன். செங்கோல்
வெண்கொற்றக் குடை எனப் போற்றப்படும், நீர்க்குமிழிபோல்
நிலையற்றவற்றைத் தேடேன்; சுற்றத்தார் உதவியையும் துணையென்று
தேடேன்; சூழ்ந்து கொண்ட முறையில் உள்ளத்தைச் சுடும் அழகிய பொன்
முதலிய செல்வங்களையும் தேடேன்; இன்பம் என நம்பிய இம்மைப் |