பக்கம் எண் :

முதற் காண்டம்506

பயன்கள் பெரிதாகக் கொண்டு சேர்க்கும் சோர்வையும் தேடேன்; நீ
செய்யும் அருளை மட்டுமே தேடுவேன்" என்று சூசை தன் நன்றியுரையை
முடித்தான்.

 
                  69
என்றான் மென்றா தோங்கிய கோலா னிவைகேட்டாங்
கொன்றா நின்றார் வான்சபை யுள்ளா ருணர்வுள்ளிக்
குன்றா மென்றா தூறிய தீந்தேன் கொடுபைம்பூப்
பொன்றா வன்பால் விண்மழை போலப் பொழிகின்றார்.
 
என்றான் மென் தாது ஓங்கிய கோலான். இவை கேட்டு
                                       ஆங்கு
ஒன்றா நின்றார் வான் சபை உள்ளா உணர்வு உள்ளி,
குன்றா மென் தாது ஊறிய தீம் தேன் கொடு பைம் பூ,
பொன்றா அன்பால், விண் மழை போலப் பொழிகின்றார்.

     என்று இவ்வாறெல்லாம், மெல்லிய பூக்களால் ஓங்கிய கோலைக்
கொண்டுள்ள சூசை கூறினான். அங்கு ஒன்றி நின்ற வானுலக சபையார்
இவற்றைக் கேட்டு, இதுகாறும் தாங்கள் எண்ணாத அவனது உணர்வின்
மேன்மையை நினைந்து, மாறாத அன்போடு, குறையில்லாத மெல்லிய
இதழ்களிடையே ஊறிய இனிய தேனைக் கொண்டுள்ள பசுமையான
மவர்களை வானத்து மழை போலப் பொழிகின்றனர்.

     'வான் சபை' என்றது, வானவரின் ஒன்பது அணிகளைக் குறிப்பதாம்.

 
                    70
மாணக் காலப் புண்மனை வானோர் மனையொப்பப்
பேணக் காலத் தொள்ளொளி பெற்ற பெரிதென்னாக்
காணக் காலத் தாக்கைசி வந்தே கடலங்கீழ்
நாணக் காலத் தாழ்முழு கிற்றே நனிவெய்யோன்.
 
மாண் அக் கால், அப் புன் மனை வானோர் மனை ஒப்பப்
பேண் அக் காலத்து, ஒள் ஒளி பெற்ற பெரிது என்னாக்
காண் அக்காலத்து, ஆக்கை சிவந்தே, கடல் அம் கீழ்,
நாண் அக்காலத்து, ஆழ் முழுகிற்றே, நனி வெய்யோன்.