பக்கம் எண் :

முதற் காண்டம்508

     ஒன்றுகூடி ஒளிர்தல் இல்லாத ஞாயிற்றையும், திங்களையும் ஒன்றுகூட்டி
சூசைக்கும் மரியாளுக்கும் உவமை காட்டியது இல்பொருளுவமை அணியாகும்.
மா, இரு என்ற இரண்டும் பெருமை குறிக்கும் ஒருபொருட் பன்மொழி.

 
                      72
சூன்முகத் தெளிந்த மேகஞ் சுடர்ந்திரு ளறச்சூழ் மின்னும்
போன்முகத் திறைவன் றன்னைப் புதல்வனாய்க் கருப்பம்
                                         பூண்டா
டான்முகத் திருவில் வீசுந் தகுதியாற் றெளிந்த வோதி
நூன்முகத் துமிழ்ந்து தீந்தே னுகர்ந்தவாய் மலர்ந்து
                                    சொல்வாள்:
 
சூல் முகத்து எரிந்த மேகம் சுடர்ந்து இருள் அறச் சூழ்
மின்னும் போல், முகத்து இறைவன் தன்னைப் புதல்வனாய்க்
                                    கருப்பம் பூண்டாள்
தான் முகத் திரு வில் வீசும் தகுதியால், தெளிந்த ஓதி
நூல் முகத்து உமிழ்ந்து, தீம் தேன் நுகர்ந்த வாய் மலர்ந்து
                                    சொல்வாள்:

     நீரை உள்ளே கருக்கொண்டமையால் கரிந்த மேகம் சுற்றிலும் இருள்
நீங்குமாறு ஒளிர்ந்து மின்னுவதுபோல், தன்னுள் ஆண்டவனை மகனாகக்
கருப்பம் பூண்டுள்ள மரியாள் தானும் அழகிய ஒளியை வீசும் தன் முதத்தின்
தகைமையோடு, வேத நூலிடத்துக் கற்றுத் தெளிந்த ஞானத்தை உமிழ்ந்த
தன்மையாய், முன் அவ்வினிய தேனை நுகர்ந்த வாயைத் திறந்து
பின்வருமாறு சொல்வாள்:

     'நூல் முகத்துத் தெளிந்த ஓதியாகிய தீம் தேனை முன் நுகர்ந்து
இப்பொழுது உமிழ்ந்த தன்மையாய் வாய் மலர்ந்து சொல்வாள்' என
மாற்றிச் சேர்த்துப் பொருள் காண்க.

 
                    73
காரெழுங் ககனத் தூர்ந்த கதிர்பல உதித்தல் தந்தே
யேரெழு மணியும் பூவு மினியதீங் கனியு மற்றச்
சீரெழும் பொறித்த மாமை திளைத்தன வெவையுந் தந்த
பேரெழுங் கருணை யானே பின்னையுந் தன்னைத் தந்தான்.