| |
"கார் எழும்
ககனத்து ஊர்ந்த கதிர் பல உதித்தல் தந்தே,
ஏர் ஏழும் மணியும், பூவும், இனிய தீம் கனியும், மற்றச்
சீர் எழும் பொறித்த மாமை திளைத்தன எவையும் தந்த
பேர் எழும் கருணையானே பின்னையும் தன்னைத் தந்தான்! |
"மேகங்கள்
உலாவும் வானத்தில் ஊர்ந்து செல்லும் சுடர்கள்
பலவற்றையும் படைத்துத் தந்து, அழகிற் சிறந்த மணிகளும், மலர்களும்,
மிக இனிய கனிகளும், சித்திரத்தில் பொறித்த தன்மையாய்ச் சிறந்து
விளங்கும் அழகில் மூழ்கிய மற்ற யாவற்றையும் மனிதனுக்கென்று தந்துள்ள
பெருமை வாய்ந்த கருணை உடைய ஆண்டவனே, அதன் பின்னும்
தன்னையே தந்துள்ளான்.
தன்னையே தந்தது
மனித அவதாரத்தின் மூலமென்று அறிக.
'பொறித்த சீர் எழும் மாமை திளைத்தன மற்ற எவையும்' என மாற்றிக்
கூட்டுக.
| 74 |
நூனெறி வழங்கா
வண்ண நுதலிய கருணைச் சால்பிற்
சூனெறி நரதே லாகித் தோன்றிய பின்ன ரெந்தை
பானெறி பெருகு மின்பப் பரவைநா மூழ்கல் தந்து
வானெறி வழங்குந் தன்மை மண்ணிடை வழங்கான்
கொல்லோ? |
| |
"நூல் நெறி வழங்கா
வண்ணம், நுதலிய கருணைச் சால்பில்
சூல் நெறி நர தேவு ஆகித் தோன்றிய பின்னர் எந்தை,
பால் நெறி பெருகும் இன்பப் பரவை நாம் மூழ்கல் தந்து,
வான் நெறி வழங்கும் தன்மை மண்ணிடை வழங்கான்
கொல்லோ? |
"இலக்கிய நூல்களின்
கற்பனை முறையிலும் காணப்படாத முறையில்
தான் நினைந்த கருணையின் மேன்மையால் கருப்ப முறையில் மனித
கடவுளாகி எம் தந்தையாகிய ஆண்டவன் தோன்ற முற்பட்ட பின்,
பாலால் முறைப்படி பெருகும் இன்பக் கடலில் நாம் மூழ்க அருள்செய்து,
வான் வீட்டில் நெறியாய் வழங்கும் தூய தன்மை இம்மண்ணகத்திலும்
வழங்குமாறு செய்யமாட்டானோ?
வழங்கான
கொல்லோ வழங்கானோ; 'கொல்'
இடையே அசைநிலை. |