பக்கம் எண் :

முதற் காண்டம்510

                    75
கோலநற் படலை பைம்பூக் கூருகிர் விசித்த மாலை
லநற் கதிர்ப்பொன் பற்றுந் தடமணிப் படலை மற்ற
நீலநற் கடல்சூழ் பாரி னிகரற வலிய வார்த்திஞ்
ஞாலநற் றகவி லோங்க நாயகன் மனித னானான்
.
 
"கோல நல் படலை, பைம் பூக் கூர் உகிர் விசித்த மாலை,
சால நல் கதிர்ப் பொன் பற்றும் தட மணிப் படலை, மற்ற
நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து, இஞ்
ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான்.

     "அழகிய நல்ல கோத்த மாலை, பசுமையான மலர்களைக் கொண்டு
கூரிய நகத்தைப் பயன்படுத்திக் கட்டிய மாலை, மிக நல்ல ஒளி வீசும்
பொன்னிற் பதிக்கப்படும் பெருமை வாய்ந்த மணி மாலை, மற்ற எவ்வகை
மாலையும், நீலமான நல்ல கடல் சூழ்ந்த உலகில் நிகராகா விதமாய் ஈர்
இயல்பையும் இறுகக் கட்டி, இவ்வுலகம் நல்ல பெருமையால் ஒங்குமாறு
ஆண்டவன் மனிதன் ஆனான்.

     நூலும் பூவும், நாரும் மலரும், பொன்னும் மணியுமாக உவமைக்
கண் இரண்டும் இணைந்த தன்மை கூறவே 'அவற்றினும் சிறப்பான
முறையில்' நாயகன் மனிதன் ஆனான்' என்ற இடத்தும் இறுகக்கட்டியது
தெய்வ இயல்பையும் மானிட இயல்பையும் ஒன்றாக இணைத்த
செயலென்று தெளிக. இவற்றிடை வேற்றுமை யாது எனின், முன்னவை
இணைந்தும், பூ பூவாகவும் நூல் நூலாகவும் மற்றவையும்
அவ்விதமாகவும் நின்றன; திரு அவதாரத்திலோ இருவகை இயலும்
பிரிக்க இயலாதவாறு அரிய முறையில் கலந்து நின்றன. விளக்கம்
அடுத்த பாடல் காண்க.

 
                     76
பூட்டிய புணர்ச்சிப் பாலாற் புணரிரு துவங்கள் வேற்றாய்க்
கூட்டிய வொருவ னாய குணத்தவன் மனுவு மென்பா
னீட்டிய நலங்கள் குன்றா விறைவனு மென்பா னிவ்வாய்ச்
சூட்டிய கருணை நன்னூற் றுறைவலோ ரடையும் பாலோ.