பக்கம் எண் :

முதற் காண்டம்511

 
"பூட்டிய புணர்ச்சிப் பாலால் புணர் இரு துவங்கள் வேற்று
                                       ஆய்,
கூட்டிய ஒருவன் ஆய குணத்தவன் மனுவும் என்பான்;
ஈட்டிய நலங்கள் குன்றா இறைவனும் என்பான்; இவ்வாய்ச்
சூட்டிய கருணை நல் நூல் துறை வலோர் அடையும்
                                       பாலோ?

     "பூட்டிய சேர்க்கை முறையால் இணைத்த இரு தன்மைகளும் வேறு
வேறாய் இருக்கவும், அவற்றை இரண்டறக் கூட்டிச் சேர்த்த ஒருவன்
என்னும் தன்மையை உடைய அவன் ஒரே நேரத்தில் மனிதன் எனவும்
ஆவான்; அதே நேரத்தில் தன்னிடம் குவிந்துள்ள தெய்வ நலங்கள்
ஒன்றும் குறையாத கடவுளும் ஆவான். இவ்வாறாய் அவன் புனைந்து
நின்ற கருணைச் செயல் நல்ல நூல் துறைகளிலெல்லாம் வல்லோரும்
உணரும் தன்மையதோ?

 
                     77
நஞ்சமிர் திரண்டுஞ் சேர்த்து நஞ்சுநல் லமிர்த மாமோ
விஞ்சவிர் பொன்னிற் சீருள் விசித்திது பசும்பொன் னாமோ
நெஞ்சவிர் கருணை பூண்ட நிமலன்றன் குணமுங் குன்றா
வெஞ்சழி மனுவின் றன்மை யிறைமையோ டுயர்த்தினானே.
 
"நஞ்சு அமிர்து இரண்டும் சேர்த்து, நஞ்சு நல் அமிர்தம் ஆமோ?
விஞ்சு அவிர் பொன்னில் சீருள் விசித்து, இது பசும் பொன்
                                           ஆமோ?
நெஞ்சு அவிர் கருணை பூண்ட நிமலன், தன் குணமும் குன்றா,
எஞ்சு அழி மனுவின் தன்மை இறைமையோடு உயர்த்தினானே!

     "நஞ்சு அமிழ்தம் இரண்டையும் ஒன்றாய்ச் சேர்த்தால், அந்நஞ்சு
நல்ல அமிழ்தமாய் மாறுமோ? மிக்கு ஒளிரும் பொன்னோடு செம்பைச்
சேர்த்துத் தட்டினால், இச்செம்பு பசும் பொன்னாய் மாறுமோ? தன்
நெஞ்சில் விளங்கும் கருணை பூண்ட குறையற்ற ஆண்டவனோ, தன்
குணத்தில் சிறிதும் குறைபடாத விதமாய், குறையும் அழிவும் கொண்ட
மனிதத்துவத்தைத் தன் தெய்வத்துவத்தோடு சேர்த்து உயர்த்தினான்!