|
'அனந்தன்'
என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் கொள்க.
இடமும் 'புலன்' எனப்படும் ஒப்புமை நோக்கி, புலன் இங்கு 'இடம்'
எனப்பட்டது. இறகு இரண்டாவது போல், அன்பும் இறை அன்பு பிறரன்பு
என இரண்டாகக் கொள்க.
| 81 |
செருவழி
பொறிக ளைந்துஞ் செகுத்துத்தன் னிலையி னூக்க
வருவழி யென்று தானே யங்கண்வா னிறங்கிப் பாரிற்
கருவழி வந்த நாதன் கலைமுதிர் சுருதி காட்ட
வுருவழி தோன்றி மாக்க ளுறவுற மகனா னானே. |
| |
"செரு
வழி பொறிகள் ஐந்தும் செகுத்துத் தன் நிலையின் ஊக்கல்
அரு வழி என்று, தானே அம் கண் வான் இறங்கிப் பாரில்
கரு வழி வந்த நாதன், கலை முதிர் சுருதி காட்ட,
உரு வழி தோன்றி மாக்கள் உறவு உற மகன் ஆனானே! |
ஐம்பொறிகளையும்
ஞானப் போரின் வழியாக அடக்கி யாண்டு
தன் நிலையினின்று தெய்வ நிலைக்கு ஊக்கங் கொள்ளுதல் மனிதனுக்கு
அரிய வழியாகுமென்று கருதி, தானே அழகிய இடமகன்ற வானகத்தினின்று
இறங்கி இம் மண்ணகத்தில் ஒரு கருப்பத்தின் வழியாக வந்த ஆண்டவன்,
கலைகளிலெல்லாம் முதிர்ந்த கலையாகிய வேதத்தையே அதற்கு உரிய
வழியாக எடுத்துக்காட்டவும், உருவத்தோடு தோன்றி மக்களோடு
உறவாடவுமென்று ஒரு மனிதனாய்த் தானும் ஆனானே!
| 82 |
கோணெறி
கடந்த ஞானங் கூறியெம் முயிர்கள் வாழ
வாணெறி கடந்த புண்போல் வருந்தனிற் கினிதோ வன்பாற் பாணெறி கடந்தோ யெம்மாற்
பயனுனக் கீங்கொன் றுண்டோ
சேணெறி கடந்து நம்மைத் தேடிவந் துளைவா யென்றாள். |
| |
"கோள் நெறி
கடந்த ஞானம் கூறி, எம் உயிர்கள் வாழ,
வாள் நெறி கடந்த புண் போல் வருந்தல் நிற்கு இனிதோ?
அன்பால்
பாண் நெறி கடந்தோய், எம்மால் பயன் உனக்கு இங்கு ஒன்று
உண்டோ?
சேண் நெறி கடந்து நம்மைத் தேடி உளைவாய்!" என்றாள். |
|