|
கன்னித்
தாயால் கணவன் மகிழ்வு
-
விளம், - விளம், - மா, கூவிளம்
| 84 |
இன்னரு நிலைமையோ
டிரவெ லாமினி
துன்னரு முவகையோ டுணர்ந்த வோதியாற்
றுன்னரு மருள்புரி சுதனை வாழ்த்தலிற்
பன்னரு மகிழ்வினை பயந்த தாமரோ. |
| |
இன்ன அரு நிலைமையோடு,
இரவு எலாம், இனிது
உன்ன அரும் உவகையோடு, உணர்ந்த ஓதியால்,
துன்ன அரும் அருள் புரி சுதனை வாழ்த்தலின்,
பன்ன அரு மகிழ் வினை பயந்தது ஆம் அரோ. |
இவ்வாறான அரிய
நிலைமையோடு, இரவெல்லாம், இனிதாகவும்
நினைத்தற்கு அரிய மகிழ்ச்சியோடும் உள்ளத்தில் தாம் உணர்ந்த
ஞானத்தோடு அடைவதற்கு அரிய அருளைத் தமக்குப் புரிந்த மகனாம்
கடவுளை வாழ்த்திக் கொண்டே அவர்கள் இருந்தமையால், அவர்களது
ஒவ்வொரு செயலும் அவர்களுக்குச் சொல்வதற்கு அரிய மகிழ்ச்சியைத்
தருவதாயிற்று.
'அரோ'
அசைநிலை, 'இன்னரு என்பது போன்று அடி தோறும்
முதற்கண் நின்ற தொடர்கள் தொகுத்தல் விகாரம்: 'சுதன்' என்ற சொல்
'மகன்' என்னும் பொதுப் பொருளும், 'கடவுளின் திருமகன்' என்ற
சிறப்புப் பொருளும் அடங்கி நின்றது.
| 85 |
உண்ணிலா
வுரைவழி யுடுத்த பான்மையாற்
றெண்ணிலா வடியினாள் செப்புஞ் சொல்விழைந்
தெண்ணிலா வரத்தவ னெண்ணி லாமுறை
யண்ணியா யவளுறை யரங்கு ளேகுவான் |
| |
உள் நிலா உரை
வழி உகுத்த பான்மையால்,
தெண் நிலா அடியினாள், செப்பும் சொல் விழைந்து,
எண் இலா வரத்தவன், எண் இலா முறை,
அண்ணி ஆய், அவள் உறை அரங்குள் ஏகுவான். |
|