| தெளிந்த பிறை
நிலவின் மீது அடி பதித்த மரியாள் தன் உள்ளத்து
ஒளியை உறையினால் சொரிந்த தன்மையால், எண்ணற்கரிய வரங்களைக்
கொண்டுள்ள சூசை. அவள் சொல்லும் சொல்லைக் கேட்க விரும்பி, அவள்
தனித்துத் தங்கும் அறை வீட்டினுள் அணுக, எண்ணற்ற தடவை செல்வான்.
அவள் தனியறையில்
இதற்கு முன் சூசை சென்றதில்லை. இப்பொழுது
அவள் மாண்பு தெரிந்தமையாலும் உரை கேட்கும் ஆசையாலும் துணிந்து
சென்றானென்பது கருத்து.
| 86 |
விரைசெயுங்
கொடியினா னுழைபல் வேலைதே
னுரைசெயு மடந்தைவா னுயர்நின் றொள்ளொளி
வரைசெயு மளவற வழங்கல் காண்டலுங்
கரைசெயுங் கடலினுங் களிப்புற் றோங்குவான். |
| |
விரை
செயும் கொடியினான் நுழை பல் வேலை தேன்
உரை செயும் மடந்தை வான் உயர் நின்று ஒள் ஒளி
வரை செயும் அளவு அற வழங்கல் காண்டலும்
கரை செயும் கடலினும் களிப்புற்று ஒங்குவான். |
மணம் பொருந்திய
மலர்க் கொடியை உடைய சூசை இவ்வாறு
நுழையும் பல சமயத்தும், தேன் போல் உரைக்கும் இயல்புள்ள மங்கை
மரியாள், வானத்தில் உயர்ந்து நின்று மிக்க அறிவொளியை வரையறை
செய்யும் அளவு இல்லாது வழங்குவாள். அதனைக் கண்ட போதெல்லாம்
அவன் கரையுள்ள கடலைக் காட்டிலும் மிகுதியான மகிழ்ச்சி அடைந்து
எழுச்சி கொள்வான்.
| 87 |
தேனினார்
மடியெனத் திங்க டெண்சுடர்
பானிலா சகோரமே பருகி னாலெனா
வானிலா வெழுந்ததாண் மடந்தை கால்கதிர்
மீனிலா விருவிழி மேய்ந்து டேறுவான். |
|