பக்கம் எண் :

முதற் காண்டம்518

 
தேனின் ஆர் மடி எனத் திங்கள் தெண் சுடர்
பால் நிலா சகோரமே பருகினால் எனா,
வான் நிலா எழுந்த தாள் மடந்தை கால் கதிர்
மீன் நிலாவு இரு விழி மேய்ந்து உள் தேறுவான்.

     பால் நிறைந்த பசுவின் மடி போல நிலவு சொரிந்த தெளிந்த கதிராகிய
பாலொளியைச் சகோரம் பருகினாற் போல, வானத்தில் பிறை மதி மேல்
எழுந்து நின்ற கால்களை உடைய மங்கை மரியாள் சொரிந்த ஒளிக்
கதிர்களை அவன் விண்மீன் போன்ற தன் இரு கண்களாலும் பருகி
உள்ளம் தேறுவான்:

     சகோரம் - சக்கரவாகப் பறவை. இது நிலவொளியைப் பாலாகப்
பருகி உயிர் வாழ்வது என்பர். தேன் - தேனு:பசு.

 
                  88
பேருயிர்த் துணையுடல் பெயர்ந்து வான்மிசை
யேருயிர்த் திரவிபோ லெறிந்த விற்றிரள்
நேருயிர்த் தனலிமுன் பளிங்கு நேர்முகத்
தாருயிர்த் தோழனு மலங்கித் தோன்றினான்.
 
பேர் உயிர்த் துணை உடல் பெயர்ந்து, வான்மிசை
ஏர் உயிர்த்து, இரவி போல் எறிந்த வில் திரள்
நேர் உயிர்த்து, அனலி முன் பளிங்கு நேர் முகத்து
ஆர் உயிர்த் தோழனும் அலங்கித் தோன்றினான்.

     தன் உயிருக்குப் பெருந் துணையாகிய மரியாள் உடலோடு
இம்மண்ணினின்று பெயர்ந்து, வானத்தில் நின்று அழகைப் பொழிந்து,
ஆதவன் போல் வீசிய ஒளியின் திரள் சூசைக்கு நேராக விழவும்,
அவளது அரிய உயிருக்குத் தோழனாக அமைந்த சூசையும், கதிரவன்
முன் கண்ணாடி எதிர்ப்பட்ட தன்மை போல் விளங்கித் தோன்றினான்.

 
                 89
சடங்கொடு விண்ணுறை தளங்க டாழ்தலுங்
கடங்கொடு பல்லியங் கறங்கிப் பாடலு
மிடங்கொடு சூழ்தலுங் கண்டு ளின்பலை
புடங்கொடு கடல்பெருக் கெடுத்துட் புக்குளான்.