பக்கம் எண் :

முதற் காண்டம்522

                திரு மகன் பெருமை கருதிய சூசை

           - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                      95
இத்திறத் துணர்ந்த காலத் தெந்தைதன் கருணை வீர
மொய்த்திறத் தவிர்தன் றாளின் முழுதுற விசித்த கோதை
மெய்த்திறத் தெறிந்த கற்றை விலகிநீத் திறங்கி னாளென்
றத்திறத் திவன்றன் சொல்லு மார்வமு முயிர்த்துச் சொல்வான்.
 
இத் திறத்து உணர்ந்த காலத்து, எந்தை தன் கருணை வீர
மொய்த் திறத்து, அவிர் தன் தாளின் முழுது உற விசித்த கோதை,
மெய்த் திறத்து எறிந்த கற்றை விலகி மீத்து இறங்கினாள் என்று,
அத் திறத்து இவன் தன் சொல்லும் ஆர்வமும் உயிர்த்துச்
                                       சொல்வான்

     இவ்வாறெல்லாம் சூசை நினைந்து கொண்டிருந்த நேரத்தில், நம்
தந்தையாகிய ஆண்டவன் தன் கருணை கலந்த வீர வல்லபத்திறத்தால்,
ஒளிர்கின்ற தன் திரு அடியோடு முழுமையாகச் சேர்த்துக் கட்டிய மாலை
போன்ற மரியாள், தன் உடலினின்று வீசிய கதிர்த் திரள் விலகி
வானினின்று மண்ணில் இறங்கினாள் என்று கண்டான். அந்நிலையில்
இவன் தன் சொல்லும் அதனோடு கலந்து நின்ற ஆர்வமும் புலப்படப்
பின்வருமாறு சொல்வான்:

     - விளம், - விளம், - மா, கூவிளம்

 
                  96
கடம்புகுந் தேறலைச் சூல்கொள் கண்ணிபோ
றடம்புகுங் கடவுளைத் தாங்கும் பீடமே
யடம்புகொள் ளுனதுசே யுவப்ப தற்குநின்
புடம்புகுந் தமியனே புரிவ தோதுவாய்.
 
"கடம் புகும் தேறலைச் சூல் கொள் கண்ணி போல்
தடம் புகும் கடவுளைத் தாங்கும் பீடமே,
உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு, நின்
புடம் புகும் தமியனே புரிவது ஓதுவாய்."