"மணம்
பொருந்திய தேனைக் கருக் கொண்டுள்ள மாலை போல்,
பெருமையெல்லாம் சென்று சேரும் கடவுளைக் கருப்பம் தாங்கும்
பீடமே, உடம்பெடுத்துக்கொண்டு உன் வயிற்றிலுள்ள உனது மகன்
மகிழும் பொருட்டு, உன் பக்கம் வந்து புகுந்துள்ள எளியேன் செய்யத்
தக்கது யாதென்று சொல்லுவாய்.
கடவுள்
என்பதற்கு ஏற்ப, கடவுளைக் கருத் தாங்கியுள்ள
வயிற்றுக்கு உரியவளைப் 'பீடம்' என்றான்.
97 |
கையினா
லுரைசெயக் கேட்பக் கண்களால்
மொய்யினா லலைவுகொள் சிந்தை மூகைபோல்
மெய்யினா லமைந்தபின் விமலன் செய்யருள்
மையினா லுணர்கிலா மருள்கின் றேனரோ. |
|
"கையினால் உரை
செய, கேட்பக் கண்களால்,
மொய்யினால் அலைவு கொள் சிந்தை மூகை போல்,
மெய்யினால் அமைந்த பின் விமலன் செய் அருள்
மையினால் உணர்கு இலா மருள்கின்றேன் அரோ." |
"கையினால்
சைகை காட்டிப் பேசவும், பிறர் சொல்வதைக் கண்களால்
கேட்கவுமாக, மனப் போரினால் அலைக்கப்படும் சிந்தை கொண்ட
ஊமையைப் போல், குற்றமற்ற ஆண்டவன் உடலெடுத்து உன் வயிற்றுள்
அடங்கிய பின் எனக்குச் செய்துள்ள அருளையெல்லாம் நான் கொண்டுள்ள
மன இருளினால் உணர்ந்து கொள்ளுதலின்றி மயங்குகின்றேன்.
'அரோ'
அசைநிலை.
98 |
கொம்பயில்
கொடியெனக் கொடியிற் பூவெனக்
கம்பயில் முத்தென மலருட் கள்ளென
வம்பயி லுள்வயிற் றமல னாயபின்
னம்பயி லெமக்குள நயன்சொல் வாங்கொலோ. |
|
"கொம்பு அயில்
கொடி என, கொடியில் பூ என,
கம்பு அயில் முத்து என, மலருள் கள் என,
அம் பயில் உன் வயிற்று அமலன் ஆய பின்,
நம்பு அயில் எமக்கு உள நயன் சொல்வு ஆம் கொலோ? |
|