"கொம்பிற்
படர்ந்த அழகிய கொடி போலவும், கொடியிற் பூத்த மலர்
போலவும், சங்கு கொண்டுள்ள முத்துப் போலவும், பூவினுள் தேன்
போலவும் மாசில்லா ஆண்டவன் அழகு பொருந்திய உன் வயிற்றில்
கருப்பமாய் அமைந்த பின், அவன் மீதுள்ள நம்பிக்கையை உணவாகக்
கொண்டு வாழும் நமக்கு அமைந்துள்ள நன்மையைச் சொல்லவுங் கூடுமோ?
ஆம்கொலோ
- ஆமோ; 'கொல்' இடையே அசைநிலை.
99 |
மொய்யகத்
திரட்டு நீர் முடுகிச் சூழ்ந்தமர்
வையகத் துறுந்துயர் மடிய நாயகன்
மெய்யகத் துதித்தபோ தலரை வென்றநின்
கையகத் தடியனென் காண லாங்கொலோ. |
|
"மொய் அகத்து
இரட்டும் நீர் முடுகிச் சூழ்ந்து அமர்
வையகத்து உறும் துயர் மடிய, நாயகன்
மெய் அகத்து உதித்த போது, அலரை வென்ற நின்
கை அகத்து அடியனென் காணல் ஆம்கொலோ? |
"அலைகள் மோதுதலால்
ஒலிக்கும் கடல் நீர் நெருங்கிச் சூழ்ந்து
கிடக்கும் இவ்வுலகத்தில் பாவத்தால் விளையும் துன்பம் மடிந்து நீங்குமாறு,
ஆண்டவனே உடலினுள் அமைந்து உன் வயிற்றினின்று பிறந்தபோது,
தாமரை மலரை வென்ற உன் கைகளில் அடிமையாகிய நானும் அவனைக்
காணும் பேறு அடைவேனோ?
அலர் - மலர்:
பொதுப் பெயர். அது, "பூ வெனப்படுவது பொறி வாழ்
பூவே" எனப்படுதலின் (பரிபாடல்), தாமரை மலருக்குச் சிறப்புப் பெயர்
ஆயிற்று.
100 |
ஒளியமை பிறைநுதல்
புருவத் தொண்சிலை
வெளியமை யுடுவிழி துகிரை வெல்லிதழ்
நளியமை யாம்பல்வாய் நளின நாண்முகங்
களியமை நீருகக் காண லாங்கொலோ. |
|