102 |
வீயினின்
பூளையி னொய்ய மெய்யுடைச்
சேயினைத் தொழிலினாற் காய்த்த திண்கரத்
தேயினி யடியனெ னேந்த லாங்கொலோ
வாயினென் னுயிர்பிரி யாமை யாகுமோ. |
|
"வீயினின் பூளையின்
நொய்ய மெய் உடைச்
சேயினை, தொழிலினால் காய்த்த திண் கரத் -
தே இனி அடியனென் ஏந்தல் ஆம்கொலோ?
வாயின், என் உயிர் பிரியாமை ஆகுமோ? |
"மலரைக் காட்டிலும்
இலவம் பஞ்சைக் காட்டிலும் மெல்லிய
உடலைக் கொண்டுள்ள அம்மகனை, தொழிலினால் காய்ப்பு ஏறிய
உறுதியான கைகளில் இனி அடிமையாகிய நான் ஏந்தவுங் கூடுமோ? அது
வாய்த்ததாயின், என் உயிர் அம் மகிழ்ச்சியால் பிரியாதிருத்தலுங் கூடுமோ?
103 |
ஒளிப்பட
வுயர்ந்தபே றொன்று மின்றியும்
வெளிப்பட மனுப்புரம் வேய்ந்த நாயக
னளிப்பட மலர்ப்பத நயந்து சென்னிமே
லளிப்பட விருத்தியா னணித லாங்கொலோ. |
|
"ஒளிப் பட உயர்ந்த
பேறு ஒன்றும் இன்றியும்,
வெளிப் பட மனுப் புரம் வேய்ந்த நாயகன்
நளிப் பட, மலர்ப் பதம் நயந்து சென்னிமேல்
அளிப் பட இருத்தி, யான் அணிதல் ஆம்கொலோ? |
"புகழப்படுதற்கென்று
உயர்ந்த பேறு ஒன்றும் எனக்கு இல்லாதிருந்தும்,
உலகிற்கு வெளிப்படுமாறு மனித உடலை அணிந்துகொண்ட ஆண்டவன்
குளிர்ச்சி அடையுமாறு, அவனது மலர் போன்ற அடிகளை விருப்பத்தோடு
என் தலைமேல் அன்று தோன்ற இருத்தி, நான் அணிந்து கொள்ளவுங்
கூடுமோ?
104 |
திருந்துபூஞ்
சிகழிகை பூண்ட சீரெனப்
பொருந்துபூந் திருவுடல் போர்த்து நின்வயிற்
றிருந்துபூ விடையவன் பிறந்த வெல்லையின்
வருந்துபூ வெழச்செயும் வளப்பெ வன்கொலோ. |
|