பக்கம் எண் :

முதற் காண்டம்527

 
"திருந்து பூஞ் சிகழிகை பூண்ட சீர் என,
பொருந்து பூந் திரு உடல் போர்த்து, நின் வயிற் -
றிருந்து பூவிடை அவன் பிறந்த எல்லையின்,
வருந்து பூ எழச் செயும் வளப்பு எவன் கொலோ?

     "திருந்திய பூமாலையை அணிந்து கொண்ட தன்மை போல, தனக்குப்
பொருந்திய அழகிய திருவுடலை அணிந்து கொண்டு, உன் வயிற்றிலிருந்து
இம் மண்ணுலகில் அவன் பிறந்தவுடனேயே, வருந்திக் கொண்டிருக்கும்
இவ்வுலகம் எழுச்சி கொள்ளுமாறு செய்யவிருக்கும் நன்மைகள்
என்னென்னவோ?

     வளப்பு - வளப்பம் என்பதன் கடைக்குறை.

 
                 105
களிப்பனோ வழுவனோ கனியத் தானெனை
விளிப்பனோ சுளிப்பனோ விழைந்த வாண்முக
மொளிப்பனோ தழுவிய வுவப்பின் முத்தமு
மளிப்பனோ வுலகெலா மளித்த நாதனே.
 
"களிப்பனோ, அழுவனோ, கனியத் தான் எனை
விளிப்பனோ, சுளிப்பனோ, விழைந்த வாள் முகம்
ஒளிப்பனோ, தழுவிய உவப்பின் முத்தமும்
அளிப்பனோ, உலகு எலாம் அளித்த நாதனே?

      "உலகங்களையெல்லாம் படைத்துத் தந்த இவ்வாண்டவன்
என்னைக் கண்டு களிப்பானோ? அழுவானோ? கனிவோடு தானே
என்னை அழைப்பானோ? முனிவானோ? நான் விரும்பிய தன் ஒளி
முகத்தை எனக்கு மறைப்பானோ? என்னைத் தழுவிக் கொண்ட
மகிழ்ச்சியோடு முத்தமும் தருவானோ?

 
                 106
கோமுழு திறைஞ்சிய கொற்றக் கொற்றவன்
காமுழு தளிப்படக் கலிகை விண்டெனப்
பூமுழு தொழிநகை புரிதல் கண்டதே
லோமுழு துவந்துளத் துருகி யோங்குவேன்.