108 |
வளமைகொள்
திறலினால் வயங்கு மாண்பினோ
னிளமைகொள் பிறையென விளவ லாய்வளர்ந்
தெளிமைகொள் ளுணவினை யெளிய னெம்மொடு
நளிமைகொள் கருணையா னுகர்வ தாவனோ. |
|
"வளமை கொள்
திறலினால் வயங்கு மாண்பினோன்,
இளமை கொள் பிறை என இளவலாய் வளர்ந்து,
எளிமை கொள் உணவினை, எளியன் எம்மொடு,
நளிமை கொள் கருணையால் நுகர்வது ஆவனோ? |
"வளமான வல்லமையோடு
விளங்கும் மாண்புள்ள ஆண்டவன்,
இளம்பிறை போலச் சிறுவனாய் வளர்கையில், தானும் ஒர் எளியவனாய்,
பெருந்தன்மை கொண்ட கருணையால், எளிமை பொருந்திய உணவை
நம்மோடு கூடி உண்ணவும் முற்படுவானோ?
109 |
கங்கையஞ்
சுழியினிற் பட்ட காலெனச்
சங்கையம் பெற்றியா றவிக்கு மென்னுளம்
பங்கையம் பதத்தினான் பருக நானுழைத்
தெங்கையந் தொழிலினுக் கியலும் பான்மையோ. |
|
"கங்கை அம்
சுழியினிற் பட்ட கால் எனச்
சங்கை அம் பெற்றியால் தவிக்கும் என் உளம்,
பங்கையம் பதத்தினான் பருக, நான் உழைத்து,
எம் கை அம் தொழினுக்கு இயலும் பான்மையோ? |
"ஆற்று நீர்ச்சுழியில்
அகப்பட்டுக் கொண்ட மனிதனைப் போல்
என்ன செய்வேன் என்ற ஐயத்தின் தன்மையால் தவிக்கும் என் உள்ளமே;
நான் உழைத்து அதன் மூலமே தாமரை மலர் போன்ற அடிகளை உடைய
குழந்தை நாதன் உண்ண வேண்டுமாயின், அது நம் கையால் செய்யும்
தொழிலுக்கு இயலக் கூடிய தன்மையதோ?"
கங்கையஞ் சுழி,
சங்கையம் பெற்றி, எங்கையந் தொழில் என
நின்றவிடத்தெல்லாம் இடையே 'அம்' சாரியை. பங்கையம் பங்கயம்
என்ற சொல்லின் இடைப்போலி. எம் கை-நம் கை; 'நம்' என்ற பன்மை |