பக்கம் எண் :

முதற் காண்டம்530

உள்ளத்தையும் இணைத்துக் கூறியதாம். 'நம்மால்' இதுவெல்லாம் இயலாது'
என்று ஒருவன் தன்னைக் குறிப்பிடும் உலக வழக்கும் நோக்குக, சங்கை -
ஐயம், இந்தத் தெய்வக் குழந்தையை நாம் எவ்வாறு முறையாகப் பேணப்
போகிறோம் என்ற தயக்கத்தால் எழுவது.

 
                   110
அருவினைத் தொழிலுழைந் தருந்து தீரெனக்
கருவினைச் சாபமாய்க் கடவு ளேவினான்
பெருவினை செய்யநான் பிரானுண் பானெனிற்
திருவினைத் தன்மையாந் தொழில்செய் தாற்றலே.
 
"அரு வினைத் தொழில் உழைத்து அருந்துதீர்' எனக்
கரு வினைச் சாபமாய்க் கடவுள் எவினான்;
பெரு வினை செய்ய நான், பிரான் உண்பான் எனில்
திரு வினைத் தன்மை ஆம் தொழில் செய்து ஆற்றலே.

     "கடவுள், 'செய்வதற்கு அரிய செயலாகிய தொழிலால் உழைத்து
உணவு அருந்துவீர்' என்று கருப்ப நிகழ்ச்சியோடு தொடர்ந்து வரும்
சாபமாகக் கடவுள் ஏவினான்; பெருமைக்குரிய அத்தொழிலை நான் செய்ய,
அதன் மூலம் அக்கடவுளே உண்பானாயின், தொழில் செய்து அதனை
நிறைவேற்றுதல் ஒரு திருப்பணியின் தன்மை உடையதாகும்.

     'அரு வினை' என்றது. அவ்வினையின் வருத்தம் குறிப்பதாகக்
கொள்க. சாபம், ஆதிப் பாவத்தின் தண்டனையாகக் கடவுள் ஆதாம்
மூலம் மனிதருக்கெல்லாம் தந்த சாபம்.

 
                111
துதிவளர் வரம்பிலா தனந்த சோபனத்
திதிவள ருவப்பெழீஇ யமரர் செய்புகழ்
விதிவளர் தகுதிமா விமலற் கீங்குரிப்
பதிவள ரிருத்தியின் பயனி லாயதே.