|
"துதி வளர் வரம்பு
இலாது, அனந்த சோபனத்
திதி வளர் உவப்பு ஏழீஇ, அமரர் செய் புகழ்
விதி வளர் தகுதி மா விமலற்கு, ஈங்கு உரிப்
பதி வளர் இருத்தியின் பயன் இல் ஆயதே. |
"தனக்கு உரிய
புகழின் வளர்ச்சிக்கு எல்லையே இல்லாமல்,
முடிவில்லாத மகிமையில் நிலைபெற்று வளரும் மகிழ்ச்சி மேலோங்கி,
வானவர் செய்யும் புகழ்ச்சி முறைக்கும் மேலாக வளரும் தகுதி கொண்ட
பெருங் கடவுளுக்கு, இவ்வுலகில் உரிய இடமென்றும் வளரும்
செல்வமென்றும் அமைந்த எதுவும் பயனற்றதாயிற்று.
எவ்விடமும்
எச்செல்வமும் தனக்கே உரியனவாதலின்,
அவனுக்கென்று இடமும் பொருளும் தேடிக் கொடுக்க முனைவது
பயனற்ற முயற்சி என்பது கருத்து.
112 |
தேனொடேத்
தியமலர்ப் பதத்திற் சேர்த்திடக்
கானொடேத் தியநுரை கதுவப் பூந்துகி
லூனொடேந் தியதிரு வுடலஞ் சாய்ந்திட
மீனொடேந் தியவணை வேய்ந்தி லாயதே. |
|
"தேனொடு ஏந்திய
மலர்ப் பதத்தில் சேர்த்திட,
கானொடு ஏந்திய நுரை கதுவுஅப் பூந் துகில்,
ஊனொடு ஏந்திய திரு உடலம் சாய்ந்திட
மீனொடு ஏந்திய அணை, வேய்ந்து இல் ஆயதே. |
"திருமகனின்
தேனால் நிறைந்த தாமரை மலர் போன்ற அடியில்
சேர்க்கத் தக்கவாறு, மணம் பொருந்திய நுரை போன்ற மெல்லிய
ஆடையோ, ஊனோடு தாங்கிய அவன் திருவுடல் துயில் கொள்வதற்கு
விண்மீன்களால் அழகு பெற்று உயர்ந்த மெத்தையோ, ஒப்பனை
அற்றவை ஆயின.
113 |
இலங்கொளிக்
குருமணி யிணைக்கிப் பொன்றவ
ழலங்கொளிச் சாமரை யமைந்தி லாயதே
விலங்கொளிப் பரப்புற விரித்து நற்பகல்
துலங்கொளிப் படமுயர் தோன்றி லாயதே. |
|