|
"இலங்கு ஒளிக்
குரு மணி இணைக்கி, பொன் தவழ்
அலங்கு ஒளிச் சாமரை அமைந்து இல் ஆயதே!
விலங்கு ஒளிப் பரப்பு உற விரித்து, நல் பகல்
துலங்கு ஒளிப் படம் உயர் தோன்று இல் ஆயதே!. |
"அத்தகைய திருமகனுக்கு,
விளங்கும் ஒளி கொண்ட செந் நிறமான
மாணிக்கங்கள் பதித்து, பொன்னால் செய்து அசைந்து ஒளிரும் சாமரையும்
அமையாது போயிற்றே! வீசிய ஒளிப் பரப்பு என்னுமாறு விரித்து, நல்ல
பகல் போல் துலங்கும் ஒளியுள்ள மேற்கட்டியும் மேலே காணப்படாது
ஆயிற்றே!
இணைக்கி
- இணைத்து.
114 |
தானிழுக்
குறாதெரி மதியந் தாங்கிய
மீனிழுக் குறவெரி பசும்பொன் வெற்பெனா
வானிழுக் குறவெரி மணிச்சிங் காசனம்.
பானிழுக் குறவெரி பாலற் கில்லதே. |
|
"தான் இழுக்கு
உறாது எரி மதியம் தாங்கிய
மீன் இழுக்கு உற எரி பசும் பொன் வெற்பு எனா,
வான் இழுக்கு உற எரி மணிச் சிங்காசனம்,
பான் இழுக்கு உற எரி பாலற்கு இல்லதே! |
"தன்னிடத்துக்
கறை என்னும் குறை இல்லாது ஒளிரும் மதிபோன்ற
வெண் கொற்றக் குடை தாங்கி, விண்மீன்களும் குறைபடுமாறு ஒளிரும்
பசும் பொன்னாலாகிய மலைபோல் உயர்ந்து, வான் சுடர்களும்
குறைபடுமாறு ஒளிரும் மணிகள் பதித்த ஒரு அரியணை, கதிரவனும்
குறைபடுமாறு ஒளிரும் திவ்விய பாலனுக்கு இல்லாது போயிற்றே!
'எரி
மதியம்' என்றது, உருவகமாக வெண்கொற்றக் குடையையும்,
'வான்' என்றது, ஆகு பெயராக வான் சுடர்களையும் குறிக்கும்.
115 |
மின்வளர்
நவமணி மிடைந்த போதிகை
பொன்வளர் தூண்மிசை பொருத்திச் செஞ்சுட
ரின்வள ரிளவெயி லெறிந்த மாளிகை
கொன்வளர் நசைக்கிணை கொண்ட தில்லதே. |
|