பக்கம் எண் :

முதற் காண்டம்53

                     70
காவிடை மாதவர் கந்தம லிந்தன கஞ்சமி டைந்தனமே
பூவிடை தேனளி கொம்பும லிந்துபு கன்றம டங்கிளிகள்
நாவடை பாவின நங்கையி னன்கையி னம்புந ரம்புளயாழ்
யாவிடை யாயினு மென்றும ருந்தயை யெந்தையை                                     வாழத்தினவே.
 
கா இடை மா தவர், கந்தம் மலிந்தன கஞ்சம் மிடைந்து அனமே,
பூ இடை தேன் அளி, கொம்பு மலிந்து புகன்ற மடங் கிளிகள்,
நா இடை பா இனம், நங்கையின் நன் கையின் நம்பு நரம்பு உள                                          யாழ்,
யா இடை ஆயினும், என்றும் அருந் தயை எந்தையை                                          வாழ்த்தினவே.

     காடுகளில் பெரிய தவ முனிவர்களும் வாசனை நிறைந்த தாமரை
மலர்களில் செறிந்திருக்கும் அன்னங்களும், பூக்களில் தேன் வண்டுகளும்,
மரங்களில் நிறைந்து பேசிக் கொண்டிருந்த இளங்கிளிகளும், மக்கள்
நாவுகளில் பாடல் வகைகளும், மாதர்களின் நல்ல கைகளில் நம்பகமான
நரம்புகளை உடைய யாழ்களும், வேறு எவ்விடத்தாயினும், எந்நாளும்,
அரிய தயவுள்ள எம் தந்தையாகிய ஆண்டவனை எல்லாமே வாழ்த்தின.

     மலிந்தன - 'மலிந்த' என்ற பெயரெச்சம் 'அன்' சாரியை பெற்று
நின்றது. மிடைந்த + அனம் = மிடைந்த வனம் என்று வர வேண்டியது
மிடைந்தனம் என வந்துளது, தொகுத்தல் விகாரம்.

                         71
அறத்திறு றும்புக ழொண்புக ழென்பவ டும்பகை நின்றனர்கொல்
திறத்திறு றும்புகழ் வஞ்சனை யென்றுதெ ளிந்தம னஞ்சிதைய
மறத்திறு றுங்களி துன்பென வந்தும யங்கிவ ழங்குமெலாம்
புறத்திறு றுங்களி பொன்றில வுண்டன பொன் பொழில்                                          பொங்கினவே.
 
'அறத்தில் துறும் புகழ் ஒண் புகழ் என்ப; அடும் பகை நின்றனர் கொல்
திறத்தில் துறும் புகழ் வஞ்சனை; என்று தெளிந்த மனம் சிதைய
மறத்தில் துறும் களி துன்பு என, வந்து மயங்கி வழங்கும் எலாம்
புறத்தில் துறும் களி, பொன்று இல உண்டு அன பொன்பொழில்                                             பொங்கினதே.