119 |
வான்றனைக்
காத்தோற் காத்து வளர்ப்பதற் குரிகைத் தாதை
போன்றனைத் துணர்வும் பூண்டோய் பொலிந்தநின் விருப்ப
நன்றே
மீன்றனைக் கசடென் றோட்டி விழிகடந் தொளிநிற் பானை
மூன்றனைத் துலக மெல்லாம் முயன்றுசெய் வணக்கஞ்
சால்போ. |
|
"வான்தனைக்
காத்தோற் காத்து வளர்ப்பதற்கு உரி கைத் தாதை
பான்று அனைத்து உணர்வும் பூண்டோய், பொலிந்த நின் விருப்பம்
நன்றே.
மீன் தனைக் கசடு என்று ஒட்டி, விழி கடந்த ஒளி நிற்பானை,
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முயன்று செய் வணக்கம்
சால்போ?" |
"வானுலகையே
காத்த ஆண்டவனை இம்மண்ணுலகில் காத்து
வளர்ப்பதற்கு உரிய கைத்தாதை என்பதற்கு ஒத்தவாறு உணர்வெல்லாம்
ஒருங்கி பூண்டவனே, மிகுதியான உன் ஆசையெல்லாம் நல்லதே.
விண்மீனையும் ஒளியால் குற்றமுள்ள தென்று புறக்கணித்து,
கண்களுக்கெல்லாம் கடந்த ஒளி வடிவமாக நிற்கும் அவ்வாண்டவனை,
மூன்று உலகங்கள் எல்லாம் முயன்று செய்யும் வணக்கமும் அவன்
தகுதிக்குப் போதிய தாகுமோ?
கைத்தாதை -
வளர்ப்புத் தந்தை. 'அனைத்து' என்ற சொல்லின்பின்
'எல்லாம்' என்பதை இணைத்துக் கூறுதல் முனிவர் மரபு. காத்தோன் + காத்து
- காத்தோற் காத்து: இரண்டாம் வேற்றுமைத் தொகைப் பொருளில் னகரம்
றகரமாகத் திரிந்தது. கடந்த + ஒளி -- ‘கடந்த வொளி’ என வர வேண்டியது,
'கடந்தொளி' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.
120 |
பகையெலாம்
பழித்தி யாவும் படைத்தளித் தழிப்போ னேனுந்
தகையெலாம் பழித்த பாவந் தாங்கிய வுலகந் தாங்கு
மிகையெலாம் பழித்திவ் வாழ்க்கை விழைவுசெய் மருளை நீக்க
நகையெலாம் பழித்துத் தண்மை நல்கிய வறுமை தேர்ந்தான். |
|