|
"பகை எலாம்
பழித்து, யாவும் படைத்து அளித்து
அழிப்போனேனும்,
தகை எலாம் பழித்த பாவம் தாங்கிய உலகம் தாங்கு
மிகை எலாம் பழித்து, இவ் வாழ்க்கை விழைவு செய்
மருளை நீக்க,
நகை எலாம் பழித்து, தண்மை நல்கிய வறுமை தேர்ந்தான்." |
"அவ்வாண்டவன்,
தனக்குப் பகையாயின எல்லாவற்றையும் இகழ்ந்து
மேலோங்கி நின்று, எல்லாவற்றையும் படைத்துக் காத்து அழிக்க
வல்லவனாயினும், பெருமையை எல்லாம் பழித்த தன்மையாய்ப் பாவத்தைத்
தாங்கி நின்ற இவ்வுலகம் அதன் காரணமாகத் தாங்கி நின்ற
துன்பங்களையெல்லாம் பழித்து ஒழித்து, மறுமையை மறந்து இவ்வுலக
வாழ்க்கையையே விரும்பி நிற்கும் மயக்கத்தை நீக்கும் பொருட்டு, தானே
மகிழ்ச்சியையெல்லாம் இகழ்ந்து ஒதுக்கி, எளிமை தந்த வறுமையைத்
தனக்கெனத் தெரிந்து கொண்டான்.
121 |
தூய்மணி பெயர்பெற்
றஃகா துளங்குடுப் புறத்து நீக்கி
வேய்மணி பெயரற் றுன்னா விளக்கணி வீட்டி னின்றோ
னாய்மணி பெயற்பெற் றிக்கல் லாசைகொண் டிங்கண்
சேயாய்த்
தாய்மணி பெயர்பெற் றெம்பாற் றாழ்ந்துற லுணர்வான்
கொல்லோ. |
|
"தூய் மணி பெயர்
பெற்று அஃகா துளங்கு உடுப் புறத்து
நீக்கி,
வேய் மணி பெயர் அற்று, உன்னா விளக்கு அணி வீட்டில்
நின்றோன்,
ஆய் மணி பெயர் பெற்ற இக் கல் ஆசை கொண்டு இங்கண்
சேயாய்
தாய் மணி பெயர் பெற்று எம்பால் தாழ்ந்து உறல் உணர்வான்
கொல்லோ?" |
"தூய மணி என்ற
பெயரைத் தமக்கு உரிமையாகப் பெற்று
குறைபடாமல் ஒளிரும் விண்மீன்களையெல்லாம் ஒளியற்றனவென்று புறத்தே
தள்ளி, இவ்வுலகில் தோன்றி மணிகளெல்லாம் பெயர் அற்றுப் போகுமாறு,
கருதப்படாத ஒளியை அணிந்துள்ள வான்வீட்டில் நிலைபெற்றிருந்த
இவ்வாண்டவன், தன் தாய் அணியத் தக்க மணி என்ற பெயரைப் பெற்று,
அழகிய மணி என்ற பெயர் கொண்ட இக்கற்களின்மீது ஆசை கொண்டு,
இவ்வுலகில் ஒரு மகனாய் நம்மிடம் தாழ்ந்து வந்து அடையவும்
கருதுவானோ?"
|