பக்கம் எண் :

முதற் காண்டம்538

     ஈங்கு + புன் - 'ஈங்குப் புன்' என வருதலே பாரதியாருக்கு முற்பட்ட
காலத்து இலக்கண மரபு. கழல் - கழலணிந்த காலுக்கு ஆகுபெயர்.

 
                      123
ஆறெலாங் கடலுள் வைகு மரியதூ யறத்தி னுள்ளும்
வேறெலாத் திருவே வைகும் விழுத்தவத் திறைவ நாமே
மாறெலாங் கடந்த வன்பால் வணக்கமுட் புரிந்தா லெஞ்சேய்
பேறெலாங் கடந்த செல்வப் பெற்றியா லிமிழிற் கொள்வான்.
 
"ஆறு எலாம் கடலுள் வைகும்; அரிய தூய் அறத்தின் உள்ளும்
வேறு எலாத் திருவே வைகும். விழுத் தவத்து இறைவ, நாமே
மாறு எலாம் கடந்த அன்பால் வணக்கம் உள் புரிந்தால், எம்                                                சேய்
பேறு எலாம் கடந்த செல்வப் பெற்றியால் இமிழின் கொள்வான்."

      "ஆறுகள் எல்லாம் கடலினுள் சென்று தங்கும்; அதுபோல, கருதிப்
போற்றும் வேறு எல்லாச் செல்வங்களுமே அரிய தூய அறத்தினுள்
சென்று அடங்கும். சிறந்த தவத்திற்குத் தலைவனே, நாம் மாறுபாடெல்லாம்
கடந்த அன்போடு உள்ளத்தில் வணக்கம் புரிந்தால், நம் மகன் அதனைப்
பேறுகளுக்கெல்லாம் மேலான செல்வத்தின் தன்மையாக இன்பமாய் ஏற்றுக்
கொள்வான்."

 
                      124
களிவளர் தவத்தின் வீட்டிற் காட்சிநன் னிலையில் ஞான
வொளிவளர் கதவு சேர்த்தி யொழுக்கநற் றாளைப் பூட்டி
யளிவளர் நெஞ்சின் மஞ்சத் தன்பணை பரப்பி னேமேல்
வெளிவள ருயர்வான் வேந்தன் விழைந்துறைந் தெம்மை
                                      யாள்வான்.
 
"களி வளர் தவத்தின் வீட்டில், காட்சி நல் நிலையில், ஞான
ஒளி வளர் கதவு சேர்த்தி, ஒருக்க நல் தாளைப் பூட்டி,
அளி வளர் நெஞ்சின் மஞ்சத்து, அன்பு அணை பரப்பினேமேல்,
வெளி வளர் உயர் வான் வேந்தன் விழைந்த உறைந்து, எம்மை
                                           ஆள்வான்."