"களிப்போடு
வளர்த்த தவம் என்னும் வீட்டில், தியானம் என்னும்
நல்ல நிலைச்சட்டத்தில், ஞானம் என்னும் ஒளி பொருந்திய கதவை
இணைத்து, ஒழுக்கம் என்னும் நல்ல தாழ்ப்பாளைப் பொருத்தி, கருணை
வளரும் நெஞ்சாகிய மஞ்சத்தின் மேல், அன்பு என்னும் மெத்தையைப்
பரப்பி வைத்தோமாயின், ஆகாய வெளியின் மேல் உயர்ந்து நிற்கும்
வானுலக அரசனாகிய ஆண்டவன் அதன்மீது விரும்பி அமர்ந்து நம் மை
ஆட்கொள்வான்." தாள் - 'தாழ்' என்ற சொல்லின் கடைப்போலி.
125 |
துளைத்தெழு
நசையின் முந்நீர்ச் சுழியினாம் பட்ட தேபோ
றிளைத்தெழு மைய மென்னோ செய்கட னின்ன தென்ன
விளைத்தெழுந் தயையி னெந்தை விளம்பவேண் டுதனன்
றென்றாள்
கிளைத்தெழு நயப்பிற் றஞ்சேய்க் கேட்டிவர் வேண்டு
கின்றார். |
|
"துளைத்து
எழும் நசையின் முந்நீர்ச் சுழியில் நாம் பட்டதே போல்
திளைத்து எழும் ஐயம் என்னோ? செய் கடன் இன்னது என்ன,
விளைத்து எழும் தயையின் எந்தை, விளம்ப வேண்டுதல் நன்று"
என்றாள்.
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய்க் கேட்டு இவர்
வேண்டுகின்றார் |
"மனத்தைத்
துளைத்தெடுக்கும் ஆசையென்னும் கடலிலுள்ள
நீர்ச்சுழியில்
அகப்பட்டுக் கொண்டதுபோல் நாம் மூழ்கிக் கிடக்கும் இந்த
ஐயம் என்ன பயன் தரும்? நம்மீது விளைவித்து வளரும் தயவு கொண்டுள்ள
நம் தந்தையாகிய அவ்வாண்டவனே, நாம் செய்ய வேண்டிய கடமை
இன்னதென்று சொல்லுமாறு வேண்டிக்கொள்ளுதலே நல்லது" என்று
மரியாள் கூறினாள். எனவே, இவ்விருவரும் கிளைத்து எழும் விருப்பத்தோடு
தம் மகனையே கேட்டு வேண்டிக்கொள்கின்றனர். |