126 |
காரின்பால்
கடந்த வங்கண் ககனம்பா லெதிரில் லாளு
மோரென்பான் மனத்துட் சொல்வா னுளத்தின்பால்
வணக்கஞ் செய்து
பாரின்பால் தோன்றும் பாலா லிருவர்பால் பயந்த சேய்போ
னீரின்பால் வறுமைக் கொப்ப நீரெனை வளர்த்தல்
வேண்டும். |
|
காரின் பால்
கடந்த அம் கண் ககனம்பால் எதிர் இல் ஆளும்
ஓர் என்பான் மனத்துள் சொல்வான்: "உளத்தின்பால் வணக்கம்
செய்து,
பாரின்பால் தோன்றும் பாலால் இருவர்பால் பயந்த சேய் போல்,
நீரின்பால் வறுமைக்கு ஒப்ப நீர் எனை வளர்த்தல் வேண்டும்." |
"மேக மண்டலத்தையும்
கடந்த அழகிய இடம் அகன்ற மோட்சத்தில்
தனக்கு எதிரென்று ஒருவரும் இல்லாது ஆண்டு கொண்டிருக்கும் ஒருவன்
எனப்படும் ஆண்டவன் இவ்விருவர் மனத்துள்ளும் இவ்வாறு சொல்வான்?
"நீங்கள் உங்கள் உள்ளத்தில் கடவுளென்று எனக்கு வணக்கம் புரிந்து,
நான் இவ்வுலகில் மனிதனாகத் தோன்றும் தன்மையால் உங்கள்
இருவரிடமாகப் பெற்றெடுக்கப்பட்ட மகனே போலவும், உங்கள் வறுமைக்கு
ஒத்த தன்மையோடும் என்னை வளர்த்தல் வேண்டும்."
ஆள்
வகையால் மகன் எனப் பிரித்துப் பேசப்படினும், கடவுள்
தன்மையால் ஏனை இருவரோடும் பிரிக்கப்படாத ஒருமை
கொண்டுள்ளமையின், 'ஓர் என்பான்' என்றார்.
127 |
பொறையினார்
விரும்பும் வாழ்க்கைப் புரையினாற் சிதைவுற்
றாரென்
றிறைவனா னழிவில் ளீட்டை யிருக்குமா றிமிழிற் காட்டச்
சிறுமையால் வளம்பெற் றுங்கட் சிறுவனாய்த் திருவென்
றீந்த
வறுமையா லுயர்ந்த வும்மை வையம்வாய்த் தெரிந்தே
னென்றான். |
|
"பொறையினார்,
விரும்பும் வாழ்க்கைப் புரையினால் சிதைவு
உற்றார் என்று,
இறைவன் நான், அழிவு இல் வீட்டை இருக்கும் ஆறு இமிழின்
காட்ட,
சிறுமையால் வளம் பெற்று, உம் கண் சிறுவன் ஆய், திரு
என்று ஈந்த
வறுமையால் உயர்ந்த உம்மை வையம்வாய்த் தெரிந்தேன்"
என்றான். |
|