பக்கம் எண் :

முதற் காண்டம்541

     "பூவுலகத்தோர் தாம் விரும்பும் சிற்றின்ப வாழ்க்கையினால்
உண்டாகும் பாவத்தின் காரணமாகக் கெட்டழிந்தனர் என்று கண்டு,
அழிவில்லாத மோட்ச வீட்டைப் பெறுவிக்கும் வழியை அவர்கட்கு இனிது
காட்டும் பொருட்டு, ஆண்டவனாகிய நானே சிறுமையால் மாண்பு
அடைந்து, உம்மிடம் ஒரு மகனாய்த் தோன்ற முற்பட்டு, செல்வமென்று
நானே தந்த வறுமையால் உயர்ந்து நின்ற உம்மை இவ்வுலகத்தில் தெரிந்து
கொண்டேன்" என்று உணர்த்தினான்.

 
                    128
மாடக விசைநே ரிச்சொல் மாதவன் சூசை கேட்டே
யாடக மாடத் தோங்கி யருமணி யணைமி தம்பொற்
பாடக மொளிர்ந்தீங் காளும் பார்த்திபர் செல்வ மேய்க்குங்
கோடக லெமதில் லாமை குணமெனக் கூறினானே.
 
மாடக இசை நேர் இச்சொல் மா தவன் சூசை கேட்டே,
ஆடக மாடத்து ஓங்கி, அரு மணி அணைமீது அம் பொன்
பாடகம் ஒளிர்ந்து ஈங்கு ஆளும் பார்த்திபர் செல்வம் ஏய்க்கும்
கோடு அகல் எமது இல்லாமை குணம்" எனக் கூறினானே.

     வீணையின் இசை போன்ற இச்சொல்லைப் பெருந் தவத்தோனாகிய
சூசை கேட்டு, மரியாளை நோக்கி, "பொன்னாற் செய்த மாளிகையில்
மேம்பட்டு இருந்து, அரிய மணிகள் பதித்த அரியணை மீது அழகிய
பொன்னாற் செய்து வீரக்கழல் ஒளிசெய்ய அமர்ந்திருந்து, இவ்வுலகை
ஆளும் அரசரது செல்வமே போலும் குறை நீங்கிய நமது வறுமை
நலமுள்ளதாகும்" என்று கூறினான்.

 
                   129
அழற்றிய வேனிற் காலத் தருந்திய வமுதைக் கான்று
நிழற்றிய கொம்பிற் பேசு நிறக்கிளி யிரண்டு மென்னா
மிழற்றிய வண்ணத் தன்னார் விருப்பெனு மெழுங்கால்
                                    பொங்கிச்
சுழற்றிய நெஞ்சி லாவி சுகக்கட லமிழ்ந்திற் றன்றோ.
 
அழற்றிய வேனில் காலத்து, அருந்திய அமுதைக் கான்று,
நிழற்றிய கொம்பில், பேசு நிறக் கிளி இரண்டும் என்னா
மிழற்றிய வண்ணத்து அன்னார், விருப்பு எனும் எழும் கால்
                                      பொங்கிச்
சுழற்றிய நெஞ்சில், ஆவி சுகக் கடல் அமிழ்ந்திற்று
                                      அன்றோ.