பக்கம் எண் :

முதற் காண்டம்543

 
வீ முயங்கிய பைந் தோகை விரித்த நல் மஞ்ஞை போன்றே,
மீ முயங்கிய மீன் செய்த வெயில் முடி பூண்ட கோதை,
சே முயங்கிய மெய் போர்த்த சேய் எழும் முன், தன்
                                        கையால்
பூ முயங்கிய பால் ஆவிப் பூந் துகில் வனைந்திட்டாளே.

     பூக்களைத் தழுவிக் கிடந்த தன் பசுமையான தோகையை விரித்து
நின்ற மயில் போல, வானத்தில் பரந்து கிடந்த விண் மீன்களால் அமைத்த
ஒளி முடியை அணிந்த மாலை போன்ற மரியாள், செந்நிறம் பொருந்திய
உடலைப் போர்த்திக்கொண்ட தன் தெய்வ மகன் பிறப்பதற்கு முன்னே, பூ
வேலைப்பாடு அமைந்ததும் பாலைக் காய்ச்சும்போது எழும் ஆவியைப்
போன்றதுமான மெல்லிய ஆடை ஒன்றை அவனுக்கென்று தன் கையால்
பின்னி முடித்தாள்.

     இவ்வாடை மரியாள் தானே நூல் நூற்றுத் தையல் இல்லாமல் பின்னி
அமைத்ததென்றும், இயேசு வளர வளரத் தானும் வளர்ந்ததென்றும்
பரம்பரைச் செய்தி கூறும். இவ்வாடையே நீர் வரமடைந்த படலத்தில் (21:20)
குறிக்கப்படுகிறது எனலாம். இயேசு சிலுவையில் இறக்கும்பொழுது, போர்ச்
சேவகர் இவ்வாடையைக் கிழித்துப் பங்கு போட மனமில்லாமல், இது
யாருக்கு உரியது என்று பார்க்கச் சீட்டுப் போட்டனர். (அரு. 19:23-24)

 
                      132
தூமநற் புகைகள் சூட்டித் துளித்ததேன் சினைகொள் பைம்பூத்
தாமநற் கமழ்நீர் தூற்றித் தாழ்ந்தொரு பேழை தன்னில்
வாமநற் றுகில்பெய் தேதன் மனமெனத் திருத்தன் சேயி
னாமநற் புணர்ச்சி பூட்டி நயப்பநாள் விரும்பி நின்றாள்.
 
தூம நல் புகைகள் சூட்டி, துளித்த தேன் சினை கொள் பைம் பூத்
தாம நல் கமழ் நீர் தூற்றி, தாழ்ந்து ஒரு பேழை தன்னில்
வாம நல் துகில் பெய்தே, தன் மனம் எனத் திருத் தன் சேயின்
நாம நல் புணர்ச்சி பூட்டி, நயப்ப நாள் விரும்பி நின்றாள்.