கன்னி மரியாள்
ஆண்டவனை மகனாகப் பெற்று உலகிற்கு அருளிய செய்தியைக் கூறும் பகுதி.
ஒத்தவியான்
பணித்த குடிக் கணக்கு
-
விளம், - மா, - மா, - விளம், - மா, - மா
1 |
செல்செயுஞ்
சாப நீக்கச் செஞ்சுடர் சாபஞ் சேர்கால்
கொல்செயுஞ் சபை நீக்கிக் கூவெலா முறவாய்ப் பாவத்
தல்செயுஞ் சாப நீக்க வாண்டகை மகரஞ் சேர்ந்துள்
ளெல்செயுங் கஅனி நீக்கி யிளவலா யுதித்தல் சொல்வாம். |
|
செல் செயும்
சாபம் நீக்கச் செஞ் சுடர் சாபம் சேர் கால்,
கொல் செயும் சாபம் நீக்கி கூ எலாம் உறவு ஆய், பாவத்து
அல் செயும் சாபம் நீக்க ஆண்டகை மகரம் சேர்ந்து, உள்
எல் செயும் கன்னி நீக்கி இளவலாய் உதித்தல் சொல்வாம். |
மேகம் அமைக்கும்
வானவில்லை நீக்க ஆதவன் தனு இராசியை
அடையும் காலமாகிய மார்கழியில், கொலையைச் செய்யும் வில்லை நீக்கி
உலகமெல்லாம் உறவு கொண்டாடி அமைதி நிலவிய காலத்தில், பாவம்
என்னும் இருள் படைத்துத் தந்த தெய்வ சாபத்தை நீக்குமாறு,
அவ்வாண்டவனே விருப்பம் கொண்டு, ஒளியுடன் விளங்கும்
கன்னிமரியாளின் வயிற்றுள்ளிருந்து நீங்கப் பெற்று ஒரு குழந்தையாய்ப்
பிறந்த செய்தியைத் தொடர்ந்து கூறுவோம்.
காரும் கூதிருமாக
ஆவணி முதல் கார்த்திகை ஈறாக மழையும் வான
வில்லுமாய் இருந்து, மார்கழியில் முன்பனிக் காலம் தொடங்கும். ஆதவன்
ஒவ்வொரு மாதமும் ஒவ்வோர் இராசியைச் சார்ந்திருக்கும் முறைப்படி,
மார்கழியில் தனு இராசியைச் சார்ந்திருக்கும். இப்பாடலில், சாபம் என்ற
சொல் பலவிடத்தும் பல பொருளில் வந்தமையால் சொற் பின்வரு
நிலையணி, |