பக்கம் எண் :

முதற் காண்டம்546

                      2
மாயிரு ஞாலங் கொண்ட மருட்கினைத் தழுத வானங்
காயிரு மிடர்தீர் காவாய்க் களித்தென மாரி காலம்
போயிரு புடையிற் செந்நெல் பொதிர்ந்தமார் கழிநா ளையைந்
தாயிரு வுலகு மோங்கு வாண்டகை யுதித்த லோர்ந்தான்.
 
மா இரு ஞாலம் கொண்ட மருட்கு இனைந்து அழுத வானம்,
காய் இரும் இடர் தீர் கால் ஆய்க் களித்தென, மாரி காலம்
போய், இரு புடையில் செந் நெல் பொதிர்ந்த மார்கழி நாள்
                                            ஐயைந்து
ஆய், இரு உலகும் ஓங்க ஆண்டகை உதித்தல் ஓர்ந்தான்.

     மிகப் பெரிய இவ்வுலகம் கொண்ட பாவ மயக்கத்தின் பொருட்டு
வருந்தி அழுத தன்மையாய் மழை பொழிந்து கொண்டிருந்த வானம்,
வாட்டிக் கொண்டிருந்த பெருந் துன்பம் நீங்கும் காலம் வந்ததும் களித்தது
போல, மழைக் காலம் கழிந்து, ஆற்றின் இரு பக்கமும் செந்நெற் பயிர்
விளைச்சல் நிறைந்து தோன்றிய மார்கழி மாதம் இருபத்தைந்தாம் நாள்
ஆகும் போது, ஆண்டவன் மண்ணும் விண்ணுமாகிய இரண்டு உலகங்களும்
எழுச்சி கொள்ளுமாறு பிறக்க நினைந்தான்.

     மாயிரு - மா இரு: பெருமை குறிக்கும் இரு சொற்கள், அதன்
மிகுதி சுட்டி இணைந்து நின்றமையால், ஒரு பொருட் பன் மொழி
எனப்படும். 'மார்கழி ஐஐந்து': ஐயந் தோற்று படலம், 4 அடிக் குறிப்பு
காண்க.

 
                    3
பழியெலா நீக்கி நீங்காப் பகைமுதிர் கொடுங்கோ லோச்சி
யழிவெலாம் பயந்த பேய்வென் றமலனு மகரு மொன்றா
யிழிவெலா மொழித்து வீக்க விளவலாய்ப் பிறப்ப நாத
னுழியெலா முனைவற் றெங்கு மொருகுடை நிழற்றிற் றன்றே.
 
பழி எலாம் நீக்கி, நீங்காப் பகை முதிர் கொடுங்கோல் ஓச்சி
அழிவு எலாம் பயந்த பேய் வென்று, அமலனும் மகரும்
                                        ஒன்றாய்,
இழிவு எலாம் ஒழித்து, வீக்க இளவலாய்ப் பிறப்ப நாதன்,
உழி எலாம் முனைவு அற்று, எங்கும் ஒரு குடை நிழற்றிற்று
                                        அன்றே.