பெத்திலேம்
பயணம்
5 |
இப்பணி
கேட்டு வேதத் தெழினுதற் றிலத மொப்ப
வொப்பணி கடந்த சூசை யுளத்தழற் புகுத்தி னாற்போல்
வெப்பணி யுயிரு லாவும் வெய்துற லாற்ற மொய்கொள்
ளப்பணி யுலக வேந்தி னன்னையை நோக்கிச் சொல்வான். |
|
இப் பணி கேட்டு,
வேதத்து எழில் நுதல் திலதம் ஒப்ப
ஒப்பு அணி கடந்த சூசை, உளத்து அழல் புகுத்தினாற் போல்,
வெப்பு அணி உயிர் உலாவும் வெய்து உறல் ஆற்ற, மொய்
கொள்
அப்புஅணி உலக வேந்தின் அன்னையை நோக்கிச் சொல்வான். |
வேதத்தின்
அழகிய நெற்றியில் இட்டு வைத்த திலகத்திற்கு மட்டுமே
ஒப்பாகிப் பிற அணிகளையெல்லாம் ஒப்புக் கடந்த சூசை, தன் உள்ளத்தில்
நெருப்பைப் புகுத்தினாற்போல் இக் கட்டளையைக் கேட்டு, வெப்பத்தை
அணிந்து கொண்டது போல் தன் உயிரில் உலாவும் துன்பத்தைத் தக்கவாறு
ஆற்றிக் கொள்ள எண்ணங் கொண்டு, திரண்ட கடல் நீரை ஆடையாக
அணிந்துள்ள இவ்வுலகம் அனைத்திற்கும் அரசனாகிய ஆண்டவனின்
அன்னையை நோக்கிப் பின் வருமாறு சொல்வான்;
6 |
மன்னவ
னுலகி லெங்கும் வகுத்ததோர் பணியீ தன்றோ பின்னவன் பணித்த வாற்றாற் பெத்திலே
மென்னும் வாய்ந்த வென்னகர்க் கிறையு மெண்ணு மீவதற் கேகல் வேண்டு மன்தைற்
கடியேன் செய்யு மாவதென் றருளிச் செய்வாய். |
|
"மன்னவன் உலகில்
எங்கும் வகுத்தது ஓர் பணி ஈது அன்றோ?
பின், அவன் பணித்த ஆற்றால், பெத்திலேம் என்னும் வாய்ந்த
என் நகர்க்கு, இறையும் எண்ணும் ஈவதற்கு ஏகல் வேண்டும்;
அன்னதற்கு அடியேன் செய்யும் ஆவது என்று அருளிச்
சொல்வாய்." |
|