"இது
அரசன் உலகம் முழுவதற்கும் பொதுவாக விதித்த ஒரு
கட்டளை அல்லவா? எனவே, அவன் கட்டளையிட்ட முறைப்படி,
எனக்குக் காணியாய் அமைந்த பெத்திலேம் என்னும் என் நகருக்கு,
தலைவரியும் குடிக் கணக்கும் கொடுப்பதற்குச் செல்லுதல் வேண்டும்;
அதற்கு அடியேன் செய்யத் தக்கது எதுவென்று சொல்லியருள்வாய்.
7 |
விண்டல மகத்து
வேந்தர் வேந்தனா முனது மைந்தன்
மண்டல மகத்துத் தோன்றி மனுமகன் பிறப்ப நாளாய்த்
தண்டலை யகத்து விள்ளுந் தாதினு நொய்தா ணீயுங்
கண்டக மகத்தென் னோடு துணைவரக் கருத லாமோ. |
|
விண் தலம் அகத்து
வேந்தர் வேந்தனாம் உனது மைந்தன்,
மண் தலம் அகத்துத் தோன்றி மனுமகன் பிறப்ப நாள் ஆய்,
தண்டலை அகத்து விள்ளும் தாதினும் நொய் தாள் நீயும்
கண்டகம் அகத்து என்னோடு துணை வரக் கருதலாமோ? |
"விண்ணுலகில்
மன்னர் மன்னனாக விளங்கும் உனது மகனாகிய
ஆண்டவன், இம்மண்ணுலகில் அவதரித்துத் தோன்றி மனித மகனாய்ப்
பிறப்பதற்குரிய நாள் அடுத்து வந்துள்ளமையால், சோலையினுள் மலரும்
பூவிதழைக் காட்டிலும் மெல்லிய அடி கொண்ட நீயும், முள் நிறைந்த
அவ்வழியில் என்னோடு துணையாக வரக் கருதுவது தகுமோ?"
8 |
மின்னிநா
விடிவெற் பீர்ந்து வேறிரு கூறு செய்வ
துன்னிநா னுய்ய லாற்றே னொருநொடி பிரிந்து போகின்
முன்னிநா னடைநோய் நீக்க முதல்வற்கேட் டவன்செய்
யேவல்
பன்னிநான் செய்வ தென்னோ பகர்தியே யென்றான்
சூசை. |
|
"மின்னி நா
இடி வெற்பு ஈர்ந்து வேறு இரு கூறு செய்வது
உன்னி, நான் உய்யல் ஆற்றேன், ஒரு நொடி பிரிந்து
போகின்;
முன்னி, நான் அடை நோய் நீக்க முதல்வற் கேட்டு, அவன்
செய் ஏவல்
பன்னி, நான் செய்வது என்னோ பகர்தியே" என்றான் சூசை. |
|
|
|
|