பக்கம் எண் :

முதற் காண்டம்551

 
கேட்பது அருந் தயைக்கு இறைவன் கேட்டு உரைத்த திரு
                                      உளமே
கோட்பது அருங் குணக் கிழத்தி கொழுநன் உளத்து எழச்
                                      சொல்லி,
"வேட்பது அரும் மணம் மணத்த உயிர் இரண்டும் வேறு
                                      ஆகா;
வாட்பது அரும் நயத்து இருவர் மாநகர்க்கு ஏகுதும்"
                                      என்றாள்.

     தான் கேட்பதை அரிய தயவோடு ஆண்டவன் கேட்டுத் தனக்குச்
சொல்லிய திருவுளக் கருத்தைப் பின்பற்றுவதே கொள்கையாகக் கொண்ட
அருங்குணம் படைத்த தலைவியாகிய மரியாள், தன் கணவன் உள்ளத்தில்
எழுச்சி கொள்ளுமாறு எடுத்துச் சொல்லி, "விரும்பிப் பெறுவதற்கு அரிய
திருமணத்தால் கூட்டப் பெற்ற நம் உயிர்கள் இரண்டும் வேறு ஆக
மாட்டா; எனவே பிரிப்பதற்கு அரிய இன்பத்தோடு நாம் இருவருமே
அப்பெரிய நகருக்குச் செல்வோம்" என்றாள்.

     வாட்பு - வாள் + பு: வாளின் செயல். அதாவது, அறுத்து இரண்டு
படுத்தல். கோட்பது, வாட்பது என்ற ஈரிடத்தும் 'அது' பகுதிப் பொருள்
விகுதி.

 
                      11
தேனிகர்சொற் செவிமாந்தச் செழுந்தவத்தோ னுளத்தோங்கி
மீனிகர்பொற் சிவிகையுமால் வேழமும்பாய் பரிமாவும்
வானிகர்பொற் றிண்டேரும் வறுமையர்க்கில் லாமையினீ
கானிகர்முட் டடத்தேகக் காண்டலுளம் பொறுப்பரிதே.
 
தேன் நிகர் சொல் செவி மாந்தச் செழுந் தவத்தோன் உளத்து                                             ஓங்கி,
"மீன் நிகர் பொன் சிவிகையும், மால் வேழமும், பாய் பரி மாவும்,
வான் நிகர் பொன் திண் தேரும் வறுமையர்க்கு இல்லாமையின்,
நீ கான் நிகர் முள் தடத்து ஏகக் காண்டல் உளம் பொறுப்பு                                             அரிதே!"