பக்கம் எண் :

முதற் காண்டம்553

                    13
மாண்டகையா ரறன்சார்வா ரல்லதின மனுச்சாரா
ராண்டகையா ரருட்சாரார்க் கல்லதொரு துயர்சாரா
சேண்டகையா ரிவன்சார்பாற் செல்லுதுநா மெனவானார்
பூண்டகையா லறஞ்சார்ந்தாள் புரைசாராப் புகல் செய்தாள்.
 
"மாண் தகையார், அறன் சார்வார் அல்லது, இன மனுச் சாரார்.
ஆண்டகை ஆர் அருட் சாரார்க்கு அல்லது, ஒரு துயர் சாரா.
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம்" என,
வான் ஆர் பூண் தகையால் அறம் சார்ந்தாள், புரை சாராப்
                                      புகல் செய்தாள்.

     வானுலகிலுள்ள அணிகலனுக்கு நிகராக அறநெறியைச் சார்ந்தவளாகிய
மரியாள், சூசையை நோக்கி, "மாண்பு என்னும் தகுதியை உடையோர்,
அறத்தைத் துணையாகச் சார்ந்து நிற்பாரேயல்லாமல், தம் இன மனிதரைச்
சார்ந்து நிற்க மாட்டார். ஆண்டவனின் நிறைந்த அருளைச் சார்ந்து
நில்லாதவர்க்கே அல்லாமல், சார்ந்து நிற்பார்க்கு ஒரு துயரமும் வந்து சாராது.
வானுலகிற்குரிய தகைமை நிறைந்த இக் குழந்தையின் சார்புத் துணையால்
நாம் துணிந்து செல்வோம்" என்று குற்றமற்ற உரையைக் கூறினாள்.

     'துயர் சாரா' என்றவிடத்து, 'சாராது' என்ற சொல் கடை குறைந்து
நின்றது.

 
                    14
குவட்டாய வெள்ளநிகர் கூர்த்துவகை பெருகி யெழத்
துவட்டாத தூய்தவனுந் துணைவியெனு மாயிழையு
முவட்டாத பணிமுறையாற் செல்லவென வுணர்வுற்றார்
சவட்டாத வன்புரிமைச் சால்பினிரண் டன்றிலொத்தார்.
 
குவட்டு ஆய வெள்ள நிகர் கூர்த்து உவகை பெருகி எழ,
துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும்,
உவட்டாத பணி முறையால் செல்ல என உணர்வு உற்றார்,
சவட்டாத அன்பு உரிமைச் சால்பின் இரண்டு அன்றில்
                                      ஒத்தார்.