16 |
அருள்வீங்கும்
விண்ணரசாட் காயினவா யிரரன்றி
யிருள்வீங்குந் துகடுடைத்தோன் பிறக்குங்கா லெனவின்னும்
பொருள்வீங்கு மும்பரொன்ப தாயிரரும் புடைதிரிந்து
தெருள்வீங்குங் கதிர்பரப்பிச் செலவிட்டான் முதலோனே. |
|
அருள் வீங்கும்
விண் அரசாட்கு ஆயின ஆயிரர் அன்றி,
இருள் வீங்கும் துகள் துடைத்தோன் பிறக்கும் கால் என, இன்னும்
பொருள் வீங்கும் உம்பர் ஒன்பது ஆயிரரும், புடை திரிந்து
தெருள் வீங்கும் கதிர் பரப்பிச் செல, விட்டான் முதலோனே. |
அருள் நிறைந்த
விண்ணரசியாகிய மரியாளுக்குத் துணையாய் அமைந்த
ஆயிரம் வானவர் மட்டுமல்லாது, இருள் பெருகும் பாவத்தைப் போக்கிய
ஆண்டவன் பிறக்கும் காலம் நெருங்கியதெனக் கண்டு, பொன் வடிவாய்த்
திரளும் வானவர் இன்னும் ஒன்பதாயிரம் பேரையும், அவளைப் புடை சூழ்ந்து
தெளிவு செறியும் கதிர் பரப்பிச் செல்லுமாறு, யாவற்றிற்கும் முதல்வனாகிய
கடவுள் அனுப்பி வைத்தான்.
'துகள் துடைத்தோன்'
என இறந்த காலத்தாற் கூறியது, தெளிவு பற்றி
வந்த கால வழுவமைதி.
17 |
பிறைபழித்த
பொற்பதத்தாற் பிறைமிதித்தா டனைச்சூழப்
பொறைபழித்த தோட்டிறத்திற் பூண்டவழச் செஞ்சுடரை
நிறைபழித்த வுருச்சூட்டி நிரைநிரைவிண் ணோரிறைஞ்சி
யுறைபழித்த மலர்மாரி யுந்தரத்திற் பொழிகின்றார். |
|
பிறை பழித்த
பொற் பதத்தால் பிறை மிதித்தாள் தனைச் சூழ,
பொறை பழித்த தோள் திறத்தில் பூண் தவழ, செஞ்சுடரை
நிறை பழித்த உருச் சூட்டி, நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி,
உறை பழித்த மலர் மாரி உந்தரத்தில் பொழிகின்றார். |
திறத்தால் மலையைப்
பழித்த தம் தோள்களில் அணிகலன்கள்
தவழவும், ஒளி நிறைவால் கதிரவனையும் பழித்த உருவம் எடுத்துக்
கொண்டும், பிறையை அழகால் பழித்த தன் அடியால்
|