தாங்கினரால்
- தாங்கினர்: 'ஆல்' அசைநிலை. பொன் -
பொன்னாலாகிய அணிகளுக்கு ஆகுபெயர். முன் 17ம் பாடலில், 'தோள்
திறத்தில் பூண் தவழ், என்றதும் காண்க.
பயணத்தில்
நிகழ்ந்த புதுமை
- மா, கூவிளம்,
கூவிளம், கூவிளம்
21 |
பான
ளாவுழி பாயிரு ணீத்தொளி
தான ளாவிய தன்மையி னாயினார்
போன வாயிலெ லாம்புரை நீத்தரு
ளான தாருயி ராகுல மாறவே. |
|
பானு அளாவு உழி
பாய் இருள் நீத்து ஒளி
தான் அளாவிய தன்மையின், ஆயினார்
போன வாயில் எலாம் புரை நீத்து, அருள்
ஆனது, ஆர் உயிர் ஆகுலம் மாறவே. |
பகலவன் சென்ற
இடமெல்லாம் பரவிக்கிடந்த இருள் விலகி
ஒளியே நிறைந்து நின்ற தன்மைபோல், சூசையும் மரியாளுமாகிய
அவ்விருவரும் போன இடமெல்லாம் பாவங்கள் விலகியதனால்,
அருமையான உயிர்களுக்கெல்லாம் துயரம் மாறிப் போகவே, தெய்வ
அருள் உண்டாயிற்று.
22 |
போர்க்க
ணங்கடுத் தாலெனப் பொங்கொலிக்
கார்க்க ணங்கதங் காட்டிம லிந்துகால்
நீர்க்க ணங்கழு வாவிநி றைந்துசூழ்
சீர்க்க ணங்கொடு சீர்த்தன நாடெலாம். |
|
போர்க் கணம்
கடுத்தால் என, பொங்கு ஒலிக்
கார்க் கணம் கதம் காட்டி மலிந்து கால்
நீர்க் கணம் கழுவாவி நிறைந்து, சூழ்
சீர்க் கணம் கொடு சீர்த்தன நாடு எலாம். |
|