போரில்
இரு படைக் கூட்டம் சினந்து மோதினாற் போல, மிக்க
ஒலியோடு மழை மேகத் திரள் இடியாகிய சினம் காட்டி மிகுதியாகப்
பொழிந்த நீர்த்திரள் எங்கும் செறிந்து கிடந்த குளங்களிலெல்லாம்
பாய்ந்து நிறைந்ததனால், அந்நாட்டின் சுற்றுப்புறங்களெல்லாம் செல்வத்
திரள் கொண்டு சிறந்து விளங்கின.
கழு வாவி - 'கழுமு
வாவி' என்ற தொடர் இடை குறைந்து நின்றது.
23 |
சோலை
சூழ்வரை தூங்கிய தீம்புனல்
மாலை சூழ்வழி யொல்லென வந்துபாய்ந்
தாலை சூழ்வய லார்ந்துவி ளைந்தநெல்
வேலை சூழ்வளை முத்தென வேய்ந்ததே. |
|
சோலை சூழ் வரை
தூங்கிய தீம் புனல்,
மாலை சூழ் வழி ஒல் என வந்து பாய்ந்து,
ஆலை சூழ் வயல் ஆர்ந்து விளைந்த நெல்,
வேலை சூழ் வளை முத்து என வேய்ந்ததே. |
சோலை சூழ்ந்து
கிடந்த மலையில் தொங்குவது போல் தோன்றிய
இனிய நீர் கொண்ட அருவி, மாலை போல் மலர்கள் சுற்றிலும் மலர்ந்து
கிடந்த இடத்தில் ஒல்லென ஒலித்து வந்து பாய்ந்து, கரும்பாலைகள்
சூழ்ந்து கிடந்த வயல்களில் வந்து நிறைந்ததனால் விளைந்த நெல்,
கடலைச் சுற்றிலும் சங்கு ஈன்று வைத்த முத்துவைப் போல் விளங்கியது.
24 |
மாலை
யாரு மணமக ளாமெனாச்
சோலை யார்தருப் பூம்பணைத் தோற்றமே
மாலை யாருடு காட்டிய வானெனாச்
சேலை வார்பொய்கை தேன்மலர் விள்ளவே |
|
மாலை ஆரும் மணமகள்,
ஆம், எனா,
சோலை ஆர் தருப் பூம் பணைத் தோற்றமே
மாலை ஆர் உடு காட்டிய வான் எனா,
சேலை வார் பொய்கை தேன் மலர் விள்ளவே. |
|